வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்.. முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை..
CM MK Stalin Meeting: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். மழை நிலவரம், சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் உள்ளிட்டவை குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.

கோப்பு புகைப்படம்
சென்னை, அக்டோபர் 24, 2025: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டிக் கொண்டு வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கியது. அன்று முதல் இன்று வரை மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
வங்கக் கடலில் உருவாகும் புயல்:
பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கொள்லிடம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது படிப்படியாக வலுவடைந்து காற்றோட்டத் தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், அதனைத் தொடர்ந்து வரவிருக்கும் அக்டோபர் 27, 2025 அன்று புயலாக உருவாகக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வங்கக்கடலில் உருவாகும் மோன்தா புயல்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை:
தமிழகத்தை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்தும் நல்ல மழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் படிக்க: மாணவர்களே..! நோ ஹாலிடே.. நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும்..
அதில் பல்வேறு மாவட்டங்களின் மழை நிலவரம், மழையால் ஏற்பட்ட பாதிப்புகள், அவற்றை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் உள்ளிட்டவை குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.
தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் அறிவுரை:
சென்னை, சீனிவாசபுரம் அருகில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்து முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியினை விரைந்து முடித்திடுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். pic.twitter.com/Mh4CXJDvnl
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 24, 2025
இதேவேளை, சென்னை ஸ்ரீனிவாசபுரம் அருகில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார் என தெரிவித்தார்.