கிருஷ்ணகிரியில் ரூ. 2,885 கோடி மதிப்பிலான திட்டங்கள்.. 5 புதிய அறிவிப்புகள் வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
CM MK Stalin: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு, ஓசூரில் எல்.சி. 14 ரயில்வே கேட் பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் உள்ளிட்ட 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

கோப்பு புகைப்படம்
கிருஷ்ணகிரி, செப்டம்பர் 14, 2025: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அதேபோல் அங்கு பல நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார். குறிப்பாக, முடிவுற்ற பணிகளைத் திறந்து வைப்பதும், புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவதுமாக செயலில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செப்டம்பர் 14, 2025 தேதியான இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டார். கிருஷ்ணகிரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, முதலமைச்சர் காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் ஓசூரை சென்றடைந்தார். அங்கிருந்து கார் மூலம் கிருஷ்ணகிரிக்கு பயணித்தார். அங்கு சுங்கச்சாவடி அருகே திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதலமைச்சரின் சாலை வலம்:
சொல்லும் நல்லெண்ணமும் செயலாகி – அதன் பயன் ஒவ்வொருவரையும் சென்றடைகிறது. இதுதான், #DravidianModel!
இன்று கிருஷ்ணகிரியில் –
☀️ ரூ.2884.93 கோடி செலவிலான 193 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து,
☀️ 1114 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,
☀️ 2,23,013 பயனாளிகளுக்கு அரசு… pic.twitter.com/RgLCLO7Jt3
— M.K.Stalin (@mkstalin) September 14, 2025
இதனைத் தொடர்ந்து, ராயக்கோட்டை மேம்பாலம் முதல் அண்ணாசிலை, பெங்களூர் சாலை, ஐந்து ரோடு, சென்னை பைபாஸ் சாலை வரை முதலமைச்சர் சாலைவலம் மேற்கொண்டு, அங்கு இருந்த மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
Also Read: செப். 16 முதல் ரெடியா இருங்க.. வெளுக்கப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
பின்னர், அரசு ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.2885 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். அதோடு பல நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், 85,711 பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், ஐந்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை:
- அஞ்சட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும்.
- கிழமங்கலத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான சாலைகள் அமைக்கப்படும்.
- ஓசூரில் எல்.சி. 14 ரயில்வே கேட் பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.
- கெலமங்கலம் பகுதியில் புறவழிச்சாலை அமைக்க விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.
- ஓசூர் மாநகரில் தேசிய நெடுஞ்சாலை 44 மற்றும் 844-ஐ இணைக்க புதிய சாலை அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.