சென்னை உலா பேருந்து…நேர அட்டவணை-பயணிக்கும் வழித்தடம் வெளியீடு!
Chennai Ula Bus Time: சென்னை உலா பேருந்து இயக்கப்படும் நேரம் தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த பேருந்தானது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10 மணிக்கு தனது சேவையை தொடங்குகிறது. அரை மணி நேரத்துக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது.

சென்னை உலா பேருந்து புறப்படும் நேரம்
சென்னையில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை சுற்றுலாப் பயணிகள் சுற்றி பார்க்கும் வகையில், ” சென்னை உலா பேருந்து சேவையை கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, நேற்று சனிக்கிழமை ( ஜனவரி 17) ” சென்னை உலா பேருந்து சேவை” பயன்பாட்டுக்கு வந்தது. இந்த பேருந்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏறி பயணம் செய்தனர். இந்த நிலையில், இந்த பேருந்துக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த பேருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 10 மணி, 10:30, 11, 11:30, பிற்பகல் 12, 12:20, 12 :50, 1:20, 1:50, 2:20, 2:50, மாலை 3:50, 4:10, 4:35, 5:00, 5:40, 6:20, இரவு 7:00, 7:50, 8:30 ஆகிய நேரங்களில் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்தானது பழைய காலத்திலிருந்து இருந்தது போல சிகப்பு நிறத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேருந்தின் முன் பகுதியில் மஞ்சள் நிறமும், ” மேல மேல் புறத்தில் சென்னை உலா பேருந்து” என்ற பதாகையும் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை உலா பேருந்து செல்லும் வழித்தடம்
மேலும், பேருந்தில் உள்ள கதவுகள், ஜன்னல்கள், அதில் பொறுத்தப்பட்டுள்ள கண்ணாடிகள் ஆகியவை முந்தைய காலத்தில் இருந்தது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துக்கு பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இதில் பயணிக்க விருப்பம் காட்டி வருகின்றனர். இந்த பேருந்தில் இந்த பேருந்தானது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு பார்க் ரயில் நிலையம், எக்மோர் ரயில் நிலையம், எக்மோர் அருங்காட்சியகம், வள்ளுவர் கோட்டம், செம்மொழி பூங்கா, லஸ் கார்னர், சாந்தோம் வழியாகவும்.
மேலும் படிக்க: பொங்கலுக்கு நடனமாடிய காவலர்கள்.. நடவடிக்கை பாய்ந்ததால் சர்ச்சை.. உத்தரவு உடனே வாபஸ்…
காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை
இதேபோல, கலங்கரை விளக்கம், விவேகானந்தர் இல்லம், கண்ணகி சிலை, மெரினா பீச், போர் நினைவுச் சின்னம், தலைமைச் செயலகம், சென்னை உயர்நீதிமன்றம், பல்லவன் இல்லம் ஆகிய பகுதிகளுக்கு சென்று மீண்டும் இதே வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த பேருந்து திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும், வார விடுமுறை நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் சேவை செயல்பாட்டில் இருக்கும்.
சென்னை உலா பேருந்து நேர அட்டவணை
சென்னை உலா பேருந்து நேர அட்டவணை
ரூ.50 க்கு டிக்கெட் எடுத்து நாள் முழுவது பயணிக்கலாம்
இந்த பேருந்தில் ரூ.50-க்கு டிக்கெட் எடுத்து ஒரு நாள் முழுவதும் பயணம் மேற்கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏறி குறிப்பிட்ட இடத்தில் இறங்குவதற்கு என்று தனியாக டீலக்ஸ் பேருந்தின் கட்டணம் அடிப்படையில் பயணச்சீட்டு பெற்று பயணிக்கலாம். ” சென்னை உலா பேருந்தில்” பயணம் செய்வதற்கு எந்த வழித்தடத்திலும் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வேண்டுமானாலும் ஏறி பயணச்சீட்டு பெற்று பயணம் செய்யலாம். ரூ.50-க்கு பயணச்சீட்டு பெற்று 5 பேருந்துகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: குன்னூர் அருகே திடீர் மண் சரிவு.. 3 தொழிலாளர்கள் பரிதாபமாக பலி.. பெரும் சோகம்..