Chennai Local Trains Cancelled: சென்னை மூர் மார்க்கெட் முதல் கும்மிடிப்பூண்டி வரை.. ஜூலை 3ம் தேதி 38 புறநகர் ரயில்கள் ரத்து!

Chennai Suburban Train Cancellations: ஜூலை 3, 2025 அன்று, சென்னை புறநகர் ரயில் சேவையில் கவரைப்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையேயான பராமரிப்புப் பணிகளால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. காலை 9:15 முதல் மாலை 3:15 வரை இந்த ரத்துச் செயல்பாடு நடைபெறும். பயணிகளின் வசதிக்காக, சென்ட்ரல்-பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 21 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். ரத்து செய்யப்பட்ட ரயில்களின் முழுமையான பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Chennai Local Trains Cancelled: சென்னை மூர் மார்க்கெட் முதல் கும்மிடிப்பூண்டி வரை.. ஜூலை 3ம் தேதி 38 புறநகர் ரயில்கள் ரத்து!

புறநகர் ரயில்கள் ரத்து

Published: 

02 Jul 2025 19:56 PM

சென்னை, ஜூலை 2: சென்னை புறநகர் ரயில்களின் (Chennai Local Trains) வழிதடங்களான கவரைப்பேட்டை – கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக 2025 ஜூலை 3ம் தேதியான நாளை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே (Southern Railway) தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை அதாவது 2025 ஜூலை 3ம் தேதி காலை 9.15 மணி முதல் மாலை 3.15 மணி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் – பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 21 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, எந்தெந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்துகொள்வோம்.

ஜூலை 03, 2025 ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்:

  1. ரயில் எண்: 66000,  ஆவடி டூ மூர் மார்க்கெட் வளாகம் – புறப்படும் நேரம் காலை 04:25 மணி
  2. ரயில் எண்: 66029, மூர் சந்தை வளாகம் டூ சூலூர்பேட்டை –  புறப்படும் நேரம் காலை 05:40 மணி
  3. ரயில் எண். 66035, சூலூர்பேட்டை டூ நெல்லூர் – புறப்படும் நேரம் 07:50 மணி
  4. ரயில் எண்: 42005, மூர் சந்தை வளாகம் டூ கும்மிடிபூண்டி – புறப்படும் நேரம் காலை 06:50 மணி
  5. ரயில் எண். 42407, மூர் சந்தை வளாகம் டூ சூலூர்பேட்டை ஈமு உள்ளூர் ரயில் காலை 07:30 மணி
  6. ரயில் எண்: 42007, மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் டூ கும்மிடிபூண்டி – புறப்படும் நேரம் காலை 08:05 மணி
  7. ரயில் எண். 42411, மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் டூ சூலூர்பேட்டை –  புறப்படும் நேரம் காலை 08:35 மணி
  8. ரயில் எண்: 42009, மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் டூ கும்மிடிபூண்டி – புறப்படும் நேரம்  காலை 09:00 மணி
  9. ரயில் எண்: 42011, மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் டூ கும்மிடிப்பூண்டி –  புறப்படும் நேரம் காலை 09:30 மணி
  10. ரயில் எண். 42601, சென்னை கடற்கரை டூ  கும்மிடிபூண்டி – சூலூர்பேட்டை –  புறப்படும் நேரம் காலை 09:40 மணி
  11. ரயில் எண். 42413, மூர் மார்க்கெட் வளாகம் டூ சூலூர்பேட்டை – புறப்படும் நேரம் காலை 10:15 மணி
  12. ரயில் எண்: 42013, மூர் மார்க்கெட் வளாகம் டூ கும்மிடிப்பூண்டி – புறப்படும் நேரம் காலை 10:30 மணி
  13. ரயில் எண்: 42015, மூர் மார்க்கெட் வளாகம் டூ கும்மிடிப்பூண்டி – புறப்படும் நேரம் காலை 11:35 மணி
  14. ரயில் எண். 42415, மூர் மார்க்கெட் வளாகம் டூ சூலூர்பேட்டை – புறப்படும் நேரம் காலை 12:10 மணி
  15. ரயில் எண். 42603, சென்னை கடற்கரை டூ கும்மிடிப்பூண்டி – புறப்படும் நேரம் மதியம் 12:40 மணி
  16. ரயில் எண். 66031, மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் டூ சூலூர்பேட்டை – புறப்படும் நேரம் 13:05 மணி
  17. ரயில் எண். 66037, சூலூர்பேட்டை டூ நெல்லூர் – புறப்படும் நேரம் 15:50 மணி
  18. ரயில் எண்: 42017, மூர் மார்க்கெட் வளாகம் டூ கும்மிடிப்பூண்டி – புறப்படும் நேரம் 13:40 மணி
  19. ரயில் எண். 42605, சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி – புறப்படும் நேரம் 14:40 மணி.
  20. ரயில் எண். 42602, கும்மிடிப்பூண்டி டூ சென்னை கடற்கரை – புறப்படும் நேரம் 08:50 மணி
  21. ரயில் எண். 42014, கும்மிடிப்பூண்டி டூ மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் – புறப்படும் நேரம் 09:10 மணி
  22. ரயில் எண். 42016, கும்மிடிப்பூண்டி டூ கும்மிடிப்பூண்டி – புறப்படும் நேரம் 09:55 மணி
  23. ரயில் எண். 42408, சூலூர்பேட்டை டூ மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் -புறப்படும் நேரம் காலை 10:00 மணி
  24. ரயில் எண். 42604, கும்மிடிப்பூண்டி டூ சென்னை கடற்கரை – புறப்படும் நேரம் காலை 10:55 மணி
  25. ரயில் எண். 42018, கும்மிடிப்பூண்டி  டூ மூர் மார்க்கெட் வளாகம் – புறப்படும் நேரம் 11:25 மணி
  26. ரயில் எண். 42410, சூலூர்பேட்டை டூ மூர் மார்க்கெட் – புறப்படும் நேரம் 11:45 மணி
  27. ரயில் எண். 42020, கும்மிடிப்பூண்டி டூ மூர் மார்க்கெட் – புறப்படும் நேரம் 12:00 மணி

இன்னும் கூடுதலாக 10க்கு மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.