சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு இன்று முதல் 3 வேலை உணவு.. 512 இடங்களில் விநியோகம்..
சென்னையில் தூய்மை பணியாளர்கள், மலேரியா ஒழிப்பு தொழிலாளர்கள், மயான பூமி தூய்மைப் பணியாளர்கள் என மொத்தம் 31,373 பேர் இந்த திட்டத்தின் மூலம் பயனடைய தொடங்கியுள்ளனர். தூய்மைப் பணியாளர்கள் பணிபுரியும் இடங்களிலேயே நேரடியாக சென்று உணவு வழங்கும் வகையில் திட்டம் துவக்கப்பட்டது.
சென்னை, நம்பர் 16, 2025: தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (நவம்பர் 15, 2025) தொடங்கி வைத்தார். இதனிடையே இன்று (நவம்பர் 16, 2025) முதல் சென்னை மாநகரில் தூய்மை பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மண்டல வாரியாக உணவு வழங்கும் பணி துவங்கியுள்ளது. சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் மொத்தம் 31,373 தூய்மைப் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் முதல்வரின் உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் காலை, மதியம், இரவு வேளைகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு தினமும் சத்தான உணவு வழங்கப்படும்.
மேலும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்காக 1,000 குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக கார்கில் நகர் பகுதியில் 510 குடியிருப்புகளும் மற்றும் பெரும்பாக்கம் பகுதியில் 490 வீடுகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டு, முதல்வர் அதற்கான ஆணைகளையும் வழங்கினார். தூய்மைப் பணியில் ஈடுபடும் போது உயிரிழந்த 2 பணியாளர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
இன்று முதல் 3 வேலை உணவு:
சென்னையில் தூய்மை பணியாளர்கள், மலேரியா ஒழிப்பு தொழிலாளர்கள், மயான பூமி தூய்மைப் பணியாளர்கள் என மொத்தம் 31,373 பேர் திட்டத்தின் மூலம் பயனடைய தொடங்கியுள்ளனர். தூய்மைப் பணியாளர்கள் பணிபுரியும் இடங்களிலேயே நேரடியாக சென்று உணவு வழங்கும் வகையில் திட்டம் துவக்கப்பட்டது.
மேலும் படிக்க: இரண்டாவது வாரமாக நடக்கும் செல்லப்பிராணிகளுக்கான இலவச தடுப்பூசி முகாம்.. சென்னையில் எங்கே? முழு விவரம்..
டிசம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் அமல்:
ரூ.60 கோடி நிதி ஒதுக்கீட்டில் சென்னையில் காலை உணவு 166 இடங்கள் , மதிய உணவு 285 இடங்கள், இரவு உணவு 61 இடங்கள் என 512 இடங்களில் உணவு விநியோகம் செய்யப்படுகிறது. வரும் 2025, டிசம்பர் 6ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கும் இந்த உணவு வழங்கும் திட்டம் என்பது விரிவாக்கம் செய்யப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: நவ. 24 ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகும் புயல்.. வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன முக்கிய அப்டேட்..
சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்காக தாட்கோ நிறுவனத்தின் மூலம் விபத்தில் மரணம் அடையும்போது உதவித் தொகை, இயற்கை மரணம் அடையும்போது செலவு உதவி, கல்வி உதவி, திருமண உதவி, கர்ப்பகால உதவித் தொகை, கண் கண்ணாடி வாங்குவதற்கு உதவி, முதியோர் ஓய்வூதியம் போன்ற நலத்திட்டங்களின் கீழ் 1,000 பயனாளர்களுக்கு மொத்தம் ரூ.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.