இன்க்யூபேட்டரில் ஏற்பட்ட மின்கசிவு.. பிறந்த 6 நாள் பச்சிளம் குழந்தைக்கு ஏற்பட்ட கொடூரம்.. மருத்துவமனையின் அலட்சியம் தான் காரணமா?

சென்னையில் கடந்த ஒரு வாரமாக குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது. இந்த நிலையில், குழந்தையின் தாயை உடனடியாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியதால், குழந்தையின் பெற்றோர் மற்றும் அவர்களின் தரப்பு வழக்கறிஞர்கள் மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இன்க்யூபேட்டரில் ஏற்பட்ட மின்கசிவு.. பிறந்த 6 நாள் பச்சிளம் குழந்தைக்கு ஏற்பட்ட கொடூரம்.. மருத்துவமனையின் அலட்சியம் தான் காரணமா?

கோப்பு புகைப்படம்

Published: 

20 Mar 2026 18:52 PM

 IST

சென்னை, மார்ச் 20, 2026: சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஆனந்தபாபு – தனலட்சுமி. இவர்களுக்கு திருமணம் நடைபெற்று கடந்த மூன்று ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், புரசைவாக்கத்தில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றும் அரசு மருத்துவர் வசந்தி, பெரம்பூர் பகுதியில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார். தனலட்சுமிக்கு இவரே சிகிச்சை அளித்து, குழந்தை பாக்கியம் ஏற்பட்டுள்ளது.

இன்க்யூபேட்டரில் வைக்கப்பட்ட குழந்தை:

பின்னர், கடந்த சனிக்கிழமை தனலட்சுமிக்கு பனிக்குடம் உடைந்ததால், அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளனர். அப்போது, குழந்தையை அறுவைச் சிகிச்சை மூலம் வெளியே எடுத்த பிறகு, மருத்துவமனையில் உள்ள ‘இன்க்யூபேட்டர்’ (Incubator) எனப்படும் லைட் ரூமில் குழந்தையை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க: 11 விரைவு ரயில் சேவையில் மாற்றம்.. தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு..

மின்கசிவால் திக்காயம்:

அப்போது மின்கசிவு ஏற்பட்டதால், குழந்தைக்கு சுமார் 27% தீக்காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது. இந்த நிலையில், குழந்தையின் தாயை உடனடியாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியதால், குழந்தையின் பெற்றோர் மற்றும் அவர்களின் தரப்பு வழக்கறிஞர்கள் மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க: ராமதாஸுடன் சசிகலா மீண்டும் சந்திப்பு… கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு?

உடனடியாக வேப்பேரி காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, குழந்தையின் உறவினர்களை சமாதானப்படுத்தி மருத்துவமனை வெளியே அனுப்பினர்.

இதனிடையே, மருத்துவமனை ஊழியர் ரமேஷ் என்பவர் மருத்துவமனைக்குள் சென்று, பெற்றோர்களை பேச விடாமல் வெளியே அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெற்றோரின் புகாரை அடுத்து போலீசார் விசாரணை:

கடந்த ஒரு வாரமாக குழந்தைக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, என்ன உணவு அளிக்கப்படுகிறது என்பது தொடர்பாக மருத்துவமனை தரப்பில் இருந்து எந்தவிதமான தகவலும் வழங்கப்படவில்லை என குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், குழந்தையின் தலைப்பகுதி பாதி முழுவதும் தீக்காயம் அடைந்து, பார்ப்பதற்கே மிகக் கோரமாக இருப்பதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் எந்த பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து காவல்துறை தரப்பில் தெளிவான பதில் அளிக்கப்படவில்லை என வழக்கறிஞர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்