பள்ளிக்கரணையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து.. 3 பேருக்கு காயம்..

Chennai Pallikaranai Cylinder Blast: சென்னை பள்ளிக்கரணை பகுதியில் வீட்டு உபயோக சிலிண்டர் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அடுத்தடுத்து இருக்கும் 4 குடிசைகளுக்கு பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.

பள்ளிக்கரணையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து.. 3 பேருக்கு காயம்..

கோப்பு புகைப்படம்

Published: 

06 Jul 2025 15:36 PM

 IST

சென்னை, ஜூலை 6, 2025: சென்னை பள்ளிக்கரணை அடுத்து ஜல்லடியன்பேட்டை பகுதியில் வீட்டு உபயோக சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. சிலிண்டர் வெடித்ததில் மல மலவென தீ பிடித்து அடுத்த இருக்க கூடிய நான்கு குடிசை வீடுகள் எரிந்து சேதம் அடைந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவியது. இதில் மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணை அடுத்து ஜல்லடியன்பேட்டை பத்மாவதி நகர், லோகாம்பாள் தெருவில் பார்வதி என்பவருக்கு சொந்தமான குடிசை வீட்டில், வீட்டு உபயோக சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்த சிதறியுள்ளது. இதனால் தீ விபத்து ஏற்பட்டது இந்த தீ மளமளவென பரவி அடுத்து இருக்கக்கூடிய நான்கு குடிசைகளுக்கும் பரவியுள்ளது இதனால் அந்த குடிசைகள் கடும் சேதம் அடைந்தது.

உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது:

வானுயர தீ எரிந்ததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அலறி அடித்து ஓடினர். வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறியதன் காரணமாக உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூன்று பேருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டதாகவும், அவர்களை உடனடியாக அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து வந்த மேடவாக்கம் தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர் பின்னர் வெடித்த சிலிண்டரையும் அப்பகுதியில் இருந்த மூன்று சிலிண்டர்களையும் வெடிக்கும் முன் பத்திரமாக மீட்டனர். இந்த குடிசை வீடுகளில் வட மாநில நபர்கள் 10 பேர் தங்கி இருந்துள்ளனர் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து பள்ளிக்கரணை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us
Related Stories
எரிவாயு தட்டுப்பாடு.. மத்திய மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..
ஈரான் போர் தாக்கம்.. எரிவாயு தட்டுப்பாடு குறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!
பசுமை காடுகளுக்கு மத்தியில் “குட்டி குற்றாலம்”.. பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பக்காவான இடம்!
மதுபோதையில் கொடூர தாக்குதல்.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த தாய்.. ரத்தம் வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மகன்.. அடுத்து நடந்த விபரீதம்!
Seeman Tamil Nadu Election: தனித்து களம் காணும் நாதக… காங்கிரஸ் கோட்டையில் களமிறங்கும் சீமான்.. வெற்றியை வசமாக்குவாரா!
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..