சென்னை மக்களே.. மெரினா நீச்சல் குளம் திறப்பு தேதி அறிவிப்பு.. எப்போது?
Chennai Marina Swimming Pool : சென்னை மெரினா நீச்சல் குளம் 2025 அக்டோபர் 7ஆம் தேதியான நாளை மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. நீச்சல் குளத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு, நடைபாதை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.2.50 கோடியில் சென்னை மாநகராட்சி செய்தது.

மெரினா நீச்சல் குளம்
சென்னை, அக்டோபர் 06 : சென்னை மெரினாவில் உள்ள நீச்சல் குளம் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 2025 அக்டோபர் 7ஆம் தேதியான நாளை திறக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ரூ.25 கோடியில் பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில், தற்போது திறப்பிற்கு தயாராகி உள்ளது. சென்னையின் முக்கிய அடையாளமாக மெரினா கடற்கரை உள்ளது. மெரினா கடற்கரைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். இதனால், மெரினா கடற்கரையை சென்னை மாநகராட்சி மேம்படுத்தியுள்ளது. மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை நீலக்கொடி கடலாக மாற்றியுள்ளது. இதனால், மெரினா கடற்கரைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், மெரினா கடற்கரைக்கு அருகில் நீச்சல் குளமும் உள்ளது. இந்த நீச்சல் குளத்தில் பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் இந்த மெரினா நீச்சல் குளம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நீச்சல் குளம் அதிகபட்சமாக 5 அடி ஆழம் கொண்டது. ஒரே நேரத்தில் 100 பேர் வரை நீச்சல் அடிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்த நீச்சல் குளத்திற்கு அருகில் பெண்கள், ஆண்டுகள், சிறார்களுக்கு என தனியாக உடை மாற்றும் அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நீச்சல் குளம் பராமரிப்பு பணிகளுக்காக 2025 ஜூலை மாதம் 11ஆம் தேதி தற்காலிகமாக மூடப்பட்டது. ரூ.2.50 கோடியில் நீச்சல் குளத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
Also Read : மாரத்தான் ஓடும்போதே பிரிந்த உயிர்.. இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. சென்னையில் ஷாக்
மெரினா நீச்சல் குளம் திறப்பு தேதி அறிவிப்பு
மெரினா நீச்சல் குளத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு கட்டமைப்பினை ஏற்படுத்துதல், மாற்றுத்திறனாளிகள் நடந்து செல்வதற்கான சிறப்பு பாதை அமைத்தல், தனி கழிவறை, மாற்றுத்திறனாளிகள் நீச்சல் குளத்தில் இறங்கி குளிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பராமரிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக தான் 2025 ஜூலை மாதம் மெரினா நீச்சல் குளம் மூடப்பட்டது. தற்போது பணிகள் முடிந்து, புதுப்பொலிவுடன் நீச்சல் குளம் திறப்புக்கு தயாராகி உள்ளது.
இந்த நீச்சல் குளம் 2025 அக்டோபர் 7ஆம் தேதியான நாளை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. இந்த நீச்சல் குளம் காலை 5.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை செயல்படும். காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை பெண்களுக்கான நேரமாகும். இந்த நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு க்யூஆர் கோர்டு மூலம் நேரம் நிர்ணம் செய்தல் மற்றும் கட்டணம் செலுத்தும் வசதியும் உள்ளது.
Also Read : டெலிவரி பாய் வேடம்.. தொடர் திருட்டு.. சென்னையில் இருவர் கைது!
இந்த நீச்சல் குளத்தில் ஒரு மணி நேரத்திற்கு பெரியவர்களுக்கு ரூ.50 எனவும், இதனை ஆன்லைனில் பதிவு செய்பவர்களுக்கு சிறப்பு சலுகையாக ரூ.45, 12 வயது முதல் 14 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு ரூ.30 ஆகவும், ஆன்லைனில் பதிவு செய்பவர்களுக்கு 10 சதவீத சிறப்பு சலுகையாக ரூ.25 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை பராமரிப்பு பணிகளுக்கான நீச்சல் குளம் மூடப்படும் என்றும் மற்ற நாட்களில் செயல்படும் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.