துன்புறுத்திய கணவன்.. ஆத்திரத்தில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொன்ற மனைவி.. சென்னையில் ஷாக்
Chennai Crime News : சென்னை அடுத்த புழலில் கணவன் மீது மனைவி கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கொலை செய்துள்ளார். மதுபோதைக்கு அடிமையான கணவன், தொடர்ந்து மனைவியை துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரத்தில் கணவன் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொலை செய்துள்ளார்.

மாதிரிப்படம்
சென்னை, ஆகஸ்ட் 20 : சென்னையில் கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி மனைவி கொலை (Chennai Murder) செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், ஆத்திரத்தில் கணவர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொலை செய்தது தெரியவந்துள்ளது. சென்னை அடுத்த புழல் பகுதியைச் சேர்ந்தவர் காதர் பாஷா (39). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவர் 17 ஆண்டுகளுக்கு முன்பு, நெய்வேலியைச் சேர்ந்த நிஷா (38) என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவரை இழந்த பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பர்வீன் பானு என்ற 16 வயது மகள் உள்ளார். இவர்கள் இரண்டு பேரும் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
காதர் பாஷா மதுபோதைக்கு அடிமையானவர். அடிக்கடி மது குடித்துவிட்டு, தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மதுகுடித்துவிட்டு நிஷாவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு, தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து மனைவி நிஷாவை தாக்கியும் வந்திருக்கிறார். இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவர், மீண்டும் மனைவி நிஷாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கணவர் காதர் பாஷாவை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், நிஷா ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
Also Read : கிரைம் திரில்லர் வெப் சீரீஸ் பார்த்து ஸ்கெட்ச்.. ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி!
கணவரை கொலை செய்த மனைவி
2025 ஆகஸ்ட் 10ஆம் தேதி அதிகாலையில் நிஷா கொதிக்கும் எண்ணெயை தூங்கிக் கொண்டிருந்த கணவர் காதர் பாஷா மீது ஊற்றினார். இதனால், அலறி துடித்து, காதர் பாஷா கூச்சலிட்டார். இதனை அடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த காதர் பாஷா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிஷாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணையும் நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மதுபோதைக்கு அடிமையான காதல் பாஷா, அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
Also Read : ரீல்ஸ் மோகம்.. பைக்கில் வேகமாக சென்ற 17 வயது சிறுவன் பலி.. சென்னையில் ஷாக்!
மேலும், அவரை தாக்கியும் வந்துள்ளார். இதனை அடுத்து, ஆத்திரத்தில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி மனைவி நிஷா கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபத்தில் கூட, திருநெல்வேலியில் மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் குறுக்கே வந்த மாமியாரின் கை விரலை மருமகன் கடித்து துப்பிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.