தமிழகத்தில் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையும் வெப்பநிலை.. அதிகப்படியான குளிர் இருக்கும் – வானிலை ரிப்போர்ட் இதோ..
Tamil Nadu Weather Update: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 21 டிசம்பர் 2025 தேதியான இன்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவினாலும், அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தார்.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், டிசம்பர் 21, 2025: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்தாலும், அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தை எடுத்துக் கொண்டால், இரண்டு நாட்கள், அதாவது டிசம்பர் 16 முதல் 18ஆம் தேதி வரை வடகடலோர தமிழக மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை தொடர்ந்து பெய்தது. அதே சமயத்தில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவானது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது.
அதிகாலை நேரத்தில் அதிகரிக்கும் பனிப்பொழிவு:
இந்த சூழலில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 21 டிசம்பர் 2025 தேதியான இன்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவினாலும், அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தார்.
மேலும் படிக்க: கிறிஸ்துமஸை முன்னிட்டு கேக் தயாரிப்பு… நாமக்கலில் முட்டை விலை புதிய உச்சம் – எவ்வளவு தெரியுமா?
அதேபோல், வரக்கூடிய 22 டிசம்பர் முதல் 24 டிசம்பர் வரையிலான நாட்களில் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து 26 டிசம்பர் வரை ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
4 டிகிரி செல்சியஸ் வரை குறையும் வெப்பநிலை:
தமிழகத்தில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், குறைந்தபட்ச வெப்பநிலை கணிசமாக குறையத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில், வரக்கூடிய நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 அல்லது 4 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இரவு முதல் அதிகாலை வேளையில் உரைப்பனி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தார்.
மேலும் படிக்க: ஜென் Z தலைமுறை இதனை தெரிந்துகொள்ள வேண்டும்…. – முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் ஒரு சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிர் நாட்கள் தொடரும் – பிரதீப் ஜான் :
Kulu kulu days to continue in Tamil Nadu
——————————-
With high pressure dominating peninsular India, the Kulukulu days in Peninsular India to continue. Among hill station, Arakku is coldest closely followed by our Valparai. Hosur is also giving tough fight to… pic.twitter.com/u06UZF388F— Tamil Nadu Weatherman (@praddy06) December 20, 2025
வரக்கூடிய ஒரு சில நாட்களுக்கு தமிழகத்தில் குளிர்ந்த வெப்பநிலை தொடரும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார். ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல் போலவே ஓசூரிலும் அதிகமான குளிர் பதிவாகி வருகிறது. அதே சமயத்தில், தமிழகத்தைப் பொறுத்தவரையில் வால்பாறையில் 6.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது தமிழகத்தில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை என குறிப்பிடப்பட்டுள்ளது.