அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலை.. இனி மழை இல்லை.. வெயில் மட்டும்தான்..

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ள சூழலில், இரவு நேர வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றம் இல்லாமல் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொடைக்கானலில் 8 டிகிரி செல்சியஸ் மற்றும் திருத்தணியில் 17 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலையாக பதிவாகியுள்ளது.

அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலை.. இனி மழை இல்லை.. வெயில் மட்டும்தான்..

கோப்பு புகைப்படம்

Published: 

29 Jan 2026 06:25 AM

 IST

வானிலை நிலவரம், ஜனவரி 29, 2026: கடந்த வாரம் தமிழகத்தில் கிழக்கு காற்று அலையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பதிவாகியது. குறிப்பாக வடக்கு கடலோர தமிழகத்தில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மிதமான மழையும், அவ்வப்போது லேசான மழையும் இருந்தது. அதேபோல டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஓரிரு நாட்களுக்கு மழை தொடர்ந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி ஜனவரி 29, 2026 தேதியான இன்று மற்றும் நாளை வறண்ட வானிலை இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, வரக்கூடிய ஜனவரி 31, 2026 அன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், இதர தமிழகப் பகுதிகள் முழுவதும் வறண்டு வானிலையே நிலவக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பாஜக – அதிமுக வலுவான கூட்டணி.. திமுகவுக்கு சவாலாக உருவெடுக்கும் என்டிஏ

தமிழகத்தில் இனி வறண்ட வானிலை தான் இருக்கும்:

அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் வரக்கூடிய அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையே இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில் தமிழகத்தில் பெரிய அளவிலான மாற்றம் இருக்காது என்றும், இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், வெப்பநிலை கணிசமாக உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சுமார் 30 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 22 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: இஸ்லாமியர்களுக்கு வெளியிட்ட 5 முக்கிய அறிவிப்புகள் – தஞ்சையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியீடு

தமிழகத்தில் அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலை:

தமிழகத்தில் பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ள சூழலில், இரவு நேர வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றம் இல்லாமல் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொடைக்கானலில் 8 டிகிரி செல்சியஸ் மற்றும் திருத்தணியில் 17 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலையாக பதிவாகியுள்ளது.

அதேபோல், அதிகபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் 34 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, சேலத்தில் 32.6 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 31.1 டிகிரி செல்சியஸ், நாமக்கல்லில் 32.6 டிகிரி செல்சியஸ், மதுரையில் 32 டிகிரி செல்சியஸ், குமரியில் 32.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொருத்தவரையில் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories
காவல் நிலையத்தில் தந்தை-மகள் விஷம் குடித்த சம்பவம்..தென்காசியில் 3 காவலர்கள் சஸ்பெண்ட்…எஸ்.பி.மாதவன் அதிரடி உத்தரவு!
வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை..கிலோ கணக்கில் கடல் அட்டைகள்-குதிரைகள் பறிமுதல்..ராமநாதபுரத்தில் பரபரப்பு!
இந்தியா – ஐரோப்பா ஒப்பந்தம்: வர்த்தகத்திற்கே முக்கியத்துவம்.. உக்ரைன் அல்ல – அமெரிக்கா கடும் விமர்சனம்..
தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட்?..எப்போது தாக்கல் செய்யலாம்…அரசு தீவிர ஆலோசனை!
பைக்கில் பெற்றோருடன் சென்ற கைக் குழந்தைக்கு நேர்ந்த கதி…ஈரோட்டில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்!
நிர்வாகிகளுடன் ஆலோசனை.. யாருடன் கூட்டணி? இன்று அறிவிக்கும் ஓபிஎஸ்
ஷிம்லாவில் கடும் பனிப்பொழிவு - சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்த ஹெரிடேஜ் டாய் டிரெயின்
பைக்கில் செல்வது தோனி - கோலியா? வைரலாகும் வீடியோ
அதிக அளவு தண்ணீர் குடிப்பது உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்குமா?
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ரத்தினக்கல் - அப்படி என்ன ஸ்பெஷல்?