100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை.. மழைக்கு வாய்ப்புள்ளதா?

Tamil Nadu Weather Update: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, செப்டம்பர் 30, 2025 அன்று சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், பலத்த காற்று மணிக்கு கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை.. மழைக்கு வாய்ப்புள்ளதா?

கோப்பு புகைப்படம்

Published: 

30 Sep 2025 06:15 AM

 IST

வானிலை நிலவரம், செப்டம்பர் 30, 2025:தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், வெப்பநிலையின் தாக்கமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மதுரையில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியள் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, திருச்சியில் 36.0 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூரில் 36 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 37.2 டிகிரி செல்சியஸ், மதுரையில் 38 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 36.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 33.9 டிகிரி செல்சியஸ் மற்றும் மீனம்பாக்கத்தில் 33.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக மதுரையில் இயல்பை விட 3.4 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்… கரூர் மாவட்ட செயலாளர் கைது

மிதமான மழைக்கு வாய்ப்பு:


தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, செப்டம்பர் 30, 2025 அன்று சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், பலத்த காற்று மணிக்கு கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 1, 2025 முதல் அக்டோபர் 5, 2025 வரை மிதமான மழை பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில், அதிகபட்ச வெப்பநிலை சுமார் 34 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் வெப்பசலனம் காரணமாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – அவதூறு பரப்பியதாக ஒரு பாஜக, 2 தவெகவினர் கைது

நீலகிரி கோவையில் நீடிக்கும் மழை:

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மட்டும் மிதமான மழை பதிவாகியுள்ளது. மேலும், நீலகிரி, சேலம், கன்னியாகுமரி, நாமக்கல், கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழைப்பொழிவு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.