அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட்.. பிற மாவட்டங்களில் எப்படி?
Tamil Nadu Weather Update: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், ஆகஸ்ட் 5 2025 தேதியான இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன முதல் அதி கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், ஆகஸ்ட் 5, 2025: தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 5 2025 தேதியான இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன முதல் அதி கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேனி, தென்காசி, ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலட் எச்சரிக்கையும் திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி கோவையில் வெளுக்கும் மழை:
ஆகஸ்ட் 6 2025 தேதியான நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தரைக்காற்று 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழக வெற்றிக் கழக மாநாட்டு தேதி மாற்றம்.. புதிய தேதியை அறிவிக்கும் விஜய்..!
ஆகஸ்ட் 7 2025 தேதி அன்று நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் எப்படி இருக்கும்?
ஆகஸ்ட் 8 2025 அன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகபட்ச வெப்பநிலை என்பது 37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இதுநடந்தால் விஜயுடன் கூட்டணி முடிவு.. பிரேமலதா விஜயகாந்த் பளீச் பதில்..!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தாலும் வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. சென்னை பொறுத்தவரையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 36.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.