5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.. எத்தனை நாட்களுக்கு? வானிலை ரிப்போர்ட் இதோ..

Tamil Nadu Weather Update: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், ஆகஸ்ட் 3 2025 தேதி ஆன இன்று நீலகிரி, கோவை, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.. எத்தனை நாட்களுக்கு? வானிலை ரிப்போர்ட் இதோ..

கோப்பு புகைப்படம்

Published: 

03 Aug 2025 06:10 AM

வானிலை நிலவரம், ஆகஸ்ட் 3, 2025: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பதிவு இருந்து வரும் நிலையில் மதுரை, தஞ்சை, திருச்சிராப்பள்ளி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சையில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து மதுரையில் 38 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 38.2 டிகிரி செல்சியஸ், வேலூரில் 37.9 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 37.4 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 37.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை பொறுத்த வரையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 37.1 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை:

மேலும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக ஆகஸ்ட் 3 2025 தேதி ஆன இன்று நீலகிரி, கோவை, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேனி, தென்காசி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்.. ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியீடு!

ஆகஸ்ட் 4 2025 தேதியான நாளை கோவை, நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும், தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் கொட்டித்தீரத்த மழை:


புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2 2025 தேதியான நேற்று மாலை பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்க உள்ளாகியுள்ளனர். அதேசமயம் புதுக்கோட்டையில் சுமார் 200 அல்லது 300 மில்லி மீட்டர் வரை மழை பதிவு இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.