பொளக்கும் வெயில்.. 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை.. மழைக்கு வாய்ப்பா?

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து திருச்சியில் 35.7 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 35.9 டிகிரி செல்சியஸ், மதுரையில் 37 டிகிரி செல்சியஸ், கரூரில் 38 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

பொளக்கும் வெயில்.. 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை.. மழைக்கு வாய்ப்பா?

கோப்பு புகைப்படம்

Published: 

09 Mar 2026 14:30 PM

 IST

வானிலை நிலவரம், மார்ச் 9, 2026: தென் தமிழகத்திலிருந்து கடலோர கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக மார்ச் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களில் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கியுள்ள சூழலில் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை:

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து திருச்சியில் 35.7 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 35.9 டிகிரி செல்சியஸ், மதுரையில் 37 டிகிரி செல்சியஸ், கரூரில் 38 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க: “விஜய் மக்கள் சந்திப்பை முடக்க சதி”.. தமிழகம் முழுவதும் தவெக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..

சென்னையைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 34.9 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 32.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு:

மார்ச் 11ஆம் தேதி தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை இருக்கக்கூடும் என்றும், பிற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 13ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக லேசான மழை அல்லது சாரல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நீடிக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் மார்ச் 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்களில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கரூர் கொடூர சம்பவம்… தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன்!

2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை:

மழை ஒரு பக்கம் இருந்தாலும், வெப்பநிலையின் தாக்கம் கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், வரக்கூடிய நாட்களில் தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட சில இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், தொடர்ந்து அதே நிலையில் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், ஒரு சில இடங்களில் பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us
Related Stories
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. திடீரென மாற்றப்பட்ட நீதிபதி.. பின்னணியில் என்ன நடந்தது?
கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்.. “விசில் புரட்சி வெடிக்கப்போகுது”.. செங்கோட்டையன் அதிரடி
தர்மபுரி காட்டில் பெண் சடலமாக மீட்பு: கள்ளக்காதல் விவகாரத்தில் அரங்கேறிய பயங்கரம்.. இருவர் அதிரடி கைது!
மே 4 வாக்கு எண்ணிக்கை.. தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு.. தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு..
சூரிய அஸ்தமனமும் சந்திர உதயமும் சங்கமிக்கும் மாலை.. கன்னியாகுமரியில் நாளை நிகழும் அபூர்வ காட்சி.. மிஸ் பண்ணிடாதீங்க!
சித்ரா பௌர்ணமி கிரிவலம்.. திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு இலவச பேருந்து இயக்கம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..