தமிழகத்தில் தொடரும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் அதிகபட்ச வெப்பநிலை என்பது 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடரும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

கோப்பு புகைப்படம்

Published: 

28 Jul 2025 06:10 AM

வானிலை நிலவரம், ஜூலை, 28 2025: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 26 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் மேல்பவானியில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 17 சென்டிமீட்டர் மழையும், நீலகிரியில் நடுவட்டம் பகுதியில் 16 சென்டிமீட்டர் மழையும், கோவை மாவட்டம் சின்கோனாவில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. குஜராத் – வடக்கு கேரளா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக் கடல் பகுதிகளில் காற்று அழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று அதாவது ஜூலை 28, 2025 தேதியான இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தரைக்காற்று என்பது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்பு:

அதே போல் ஜூலை 30 2025 முதல் ஆகஸ்ட் 2, 2025 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் அதிகபட்ச வெப்பநிலை என்பது 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பூரண நலத்துடன் வீடு திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின்.. 3 நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தல்..!

அதிகரிக்கும் வெப்பநிலை:

தமிழகத்தில் கடந்த சில வாரங்கள் முன்பு நல்ல மழை பதிவு இருந்த நிலையில் தற்போது மழையின் அளவு வெகுவாக குறைந்துள்ளது அதேசமயம் வெப்பநிலையின் தாக்கமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தஞ்சாவூரில் 36 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை பொறுத்த வரையில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 35.2 டிகிரி செல்சியஸும் நுங்கம்பாக்கத்தில் 351 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது.