சென்னை மெரினாவில் ரோப் கார் சேவை – வெளியான அறவிப்பு – மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்குமா?

Marina Rope Car Plan : சென்னை மெரினாவில் ரோப் கார் சேவை குறித்து பிப்ரவரி 18, 2026 அன்று மாநகராட்சி பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என்ற கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சென்னை மெரினாவில் ரோப் கார் சேவை - வெளியான அறவிப்பு - மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்குமா?

சென்னை மெரினாவில் ரோப் கார் வசதி

Published: 

18 Feb 2026 19:52 PM

 IST

சென்னை, டிசம்பர் 18 :சென்னை மெரினாவில் ரோப் கார் சேவை குறித்து பிப்ரவரி 18, 2026 அன்று மாநகராட்சி பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து மாநகராட்சி பட்ஜெட் சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா முன்னிலையில் பிப்ரவரி 18, 2026 அன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், தூய்மை பணியாளர்களு்கு கோடைகாலங்களில் மோர் வழங்கும் திட்டம், வீடில்லாதவர்களுக்கு ரூ.12 கோடி பட்ஜெட்டில் தற்காலிக கண்டெய்னர் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சென்னை மெரினாவில் ரோப் கார் சேவை

சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா முன்னிலையில் மாநகராட்சி பட்ஜெட் பிப்ரவரி 18, 2026 அன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் மெரினா ரோப் கார் சேவை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி மெரினாவில் லைட் ஹவுஸ் முதல் அண்ணா நினைவிடம் வரை அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு முனையம் கண்ணகி சிலை அருகிலும், மற்றொரு முனையம் விவேகனந்த இல்லத்தின் அருகிலும் அமைக்கப்படவுள்ளது. ஒவ்வொரு கேபினிலும் ஒரே நேரத்தில் 10 பேர் வரை அமர்ந்து பயணம் செய்யலாம் என கூறப்படுகிறது. இதன் மூலம் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் மெரினாவிற்கு வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி.. எப்போது அறிவிக்கப்படுகிறது தெரியுமா? வெளியான தகவல்!

கடந்த 2022 ஆம் ஆண்டு சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக மெரினா கடற்கரையில் இருந்து பெசண்ட் நகர் வரை ரோப் கார் சேவை திட்டத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதன் சாத்திய கூறுகள் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வந்தன. மக்கள் இந்த திட்டத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால் சென்னை சுற்றுலா மேம்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிக்க : சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணி.. மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்குமா?

இதனைத் தொடர்ந்து ரோப் கார் சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக லைட் ஹவுஸ் முதல் அண்ணா நினைவிடம் இடையே ரோப் கார் சேவை குறித்து ஆய்வு மேற்கொள்ள கடந்த 2024 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி சார்பில் டெண்டர் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மெரினாவில் சுமார் 30 அடி பள்ளம் தோண்டி மண்ணின் உறுதித் தன்மை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த ரோப் கார் சேவை முழுமையாக சூரிய மின்சக்தி மூலம் இயக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதால், இது சூற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பசுமை போக்குவரத்து முறையாக அமையும் என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.285 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரோப் கார் தூண்கள் கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டால் படகுகள் நிறுத்தப்படும் இடங்கள் பாதிக்கப்படலாம். இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என கூறப்படுகிறது. மேலும் தூண்கள் அமைக்கப்படுவது மீன்பிடி செயல்பாடுகளை பாதிக்கும் என கூறப்படுகிறது.

லாக்கரில் 2.7 கிலோ தங்கம் திருட்டு.. ஆன்லைன் சூதாட்டத்திற்காக அடமானம் வைத்த வங்கி உதவி மேலாளர்
எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ் பிராமி எழுத்துகள்.. வியக்கும் உலக நாடுகள்..
பாக்கெட் பால் குடிக்கிறீர்களா?.. நீங்கள் குடிக்கும் பால் பாதுகாப்பானதுதானா?..
மிதிலாவின் 700 ஆண்டுகால ‘பஞ்சி’ திருமண மரபு: மங்கும் பாரம்பரியம், நிலைக்கும் அறிவியல்