சென்னை சென்டிரல் – புதுடெல்லி விரைவு ரயில் சேவை நீட்டிப்பு.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Chennai central - New Delhi Train Service extended | இந்தியர்கள் மத்தியில் ரயில் போக்குவரத்து மிகவும் பிரதானமாக உள்ள நிலையில், சென்னை சென்டிரல் - புதுடெல்லி இடையே ரயில் சேவை நீட்டிக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னை சென்டிரல் - புதுடெல்லி விரைவு ரயில் சேவை நீட்டிப்பு.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

மாதிரி புகைப்படம்

Updated On: 

22 Mar 2026 07:05 AM

 IST

சென்னை, மார்ச் 22 : சென்னை சென்டிரல் – புதுடெல்லி (Chennai Central – New Delhi) விரைவு ரயில் சேவை நீட்டிக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே (Southern Railway) அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், ரயில் சேவை எதுவரை நீட்டிக்கப்பட உள்ளது, இதன் மூலம் பொதுமக்கள் எவ்வாறு பயனடைவர் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்திய பொதுமக்களின் பிரதான போக்குவரத்து சேவை

இந்திய பொதுமக்களின் பிரதான போக்குவரத்து சேவையாக, ரயில் சேவை உள்ளது. குறைந்த விலையில் விரைவாகவும், மிக நீண்ட தூரம் பயணம் செய்ய முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இவ்வாறு ஏராளமான பொதுமக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்யும் நிலையில், அவர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் தற்போது, சென்னை சென்டிரல் – புதுடெல்லி ரயில் சேவை நீட்டிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : புதுச்சேரியில் தவெக தனித்துப் போட்டி.. நாளை வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் விஜய்!

பயணிகள் வசதிக்ககாக ரயில் சேவை நீட்டிப்பு – தெற்கு ரயில்வே

இது குறித்து தெற்கு ரயில்வே தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில் சேவை மேலும் நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து – புதுடெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் ரெயில் நிலையத்திற்கு நாளை (மார்ச் 23, 2026) மற்றும் மார்ச் 30, 2026 ஆகிய தேதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதையும் படிங்க : “மிட்டாய் கூட விற்க முடியாத நிலை!” – கடலை மிட்டாய்க்கு வந்த சோதனை

மறுமார்க்கமாக இயக்கப்படும் சிறப்பு ரயில் விவரம்

இதேபோல மறுமார்க்கமாகவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு மார்ச் 26, 2026 மற்றும் ஏப்ரல் 2, 2026 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இவ்வாறு சென்னை தெற்கு ரயில்வே, ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து தனது அறிக்கையில் கூறியுள்ளது.

சென்னை முதல் டெல்லி வரை செல்லும் ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்