தமிழகத்தில் படிப்படியாக அதிகரிக்கும் வெப்பநிலை.. அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்குமா?

Tamil Nadu Weather Update: மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் கணிசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 37.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் படிப்படியாக அதிகரிக்கும் வெப்பநிலை.. அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்குமா?

கோப்பு புகைப்படம்

Published: 

29 Sep 2025 06:15 AM

 IST

வானிலை நிலவரம், செப்டம்பர் 29, 2025: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வருகிறது. ஆனால் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மட்டும் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. அந்த வகையில் தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக செப்டம்பர் 29, 2025 தேதியான இன்று தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வழக்கத்திற்கு மேல் தரைக்காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த 7 நாட்களுக்கு தொடரும் மழை:

அதனை தொடர்ந்து செப்டம்பர் 30, 2025 மற்றும் அக்டோபர் 1, 2025 ஆகிய இரண்டு நாட்களில் மிதமான மழை பதிவாகக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலை வரவிருக்கும் அக்டோபர் 4, 2025 வரை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: விஜய் வீட்டுக்கு வெடி குண்டு மிரட்டல் – நிபுணர்கள் தீவிர சோதனை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் மிதமான அல்லது லேசான மழை இரவு நேரங்களில் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் வெப்பநிலை:

மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் கணிசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 37.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து வேலூரில் 35 டிகிரி செல்சியஸ், தொண்டியில் 35.8 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 34.8 டிகிரி செல்சியஸ்,

மேலும் படிக்க: முதல் தவறு இவங்க மீது தான், ஏன் அனுமதி கொடுக்கிறார்கள்? – அண்ணாமலை கேள்வி

தஞ்சாவூரில் 35 டிகிரி செல்சியஸ், பரங்கிப்பேட்டையில் 34.8 டிகிரி செல்சியஸ், கரூரில் 35.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னைப் பொறுத்தவரையில், நுங்கம்பாக்கத்தில் 35.3 டிகிரி செல்சியஸ், மீனம்பாக்கத்தில் 35.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூரில் 2.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்:

செப்டம்பர் 27, 2025 அன்று தெற்கு ஒரிசாவின் உள்பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு திசையில் நகர்ந்து செப்டம்பர் 28, 2025 அன்று மேற்கு விதர்பா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு மத்திய மகாராஷ்டிரா பகுதிகளில் நிலவுகிறது. இது செப்டம்பர் 29, 2025 தேதியான இன்று காற்றழுத்தத் தாழ்வு பகுதியிலிருந்து வலுவிழக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் குறிப்பிடத்தக்க மழை பாதிப்பு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.