வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. எங்கெல்லாம்?

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், பகல் நேரங்களில் வானம் சற்றே மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நண்பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் இயல்பான நிலையில் இருக்கும். அதே சமயம், அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படலாம்.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. எங்கெல்லாம்?

கோப்பு புகைப்படம்

Updated On: 

18 Feb 2026 06:42 AM

 IST

வானிலை நிலவரம், பிப்ரவரி 18, 2026: பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு–வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, நேற்றைய தினம் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது. இது மேலும் மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை கருவிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் இன்று வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் வரக்கூடிய நாட்களில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்றும் நாளையும் தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்; மழைக்கான வாய்ப்புகள் இல்லை எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: புதிய கட்சியைத் தொடங்கும் பண்ருட்டி ராமச்சந்திரன் – என்ன பெயர் தெரியுமா?

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு:

பிப்ரவரி 20ஆம் தேதி கடலோர மற்றும் தென் தமிழகம், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில் வறண்ட வானிலை தொடரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 21ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து, பிப்ரவரி 22ஆம் தேதி தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சென்னையின் மர்ம பங்களா – அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு என்ன நடந்தது?

தமிழகத்தில் பனிமூட்டம் இருக்குமா?

மழை ஒரு பக்கம் இருந்தாலும், அதிகாலை வேளையில் ஒரு சில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வட தமிழக மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படலாம்.

அதிகபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில், வரக்கூடிய நாட்களில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படும் வாய்ப்பு குறைவு என குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில், படிப்படியாக உயரக்கூடும். அதாவது, வரக்கூடிய நாட்களில் இரவு நேர வெப்பநிலை 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிப்படியாக உயரும் வெப்பநிலை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், பகல் நேரங்களில் வானம் சற்றே மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நண்பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் இயல்பான நிலையில் இருக்கும். அதே சமயம், அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படலாம். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஈரோட்டில் 35.2 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 33.7 டிகிரி செல்சியஸ், மதுரையில் 33.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னைப் பொருத்தவரையில் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திரைப்பட விருது விழா.. சூர்யாவுக்கு மாற்றி கொடுக்கப்பட்ட ரஹ்மானின் விருது.. மேடையில் சிரிப்பலை
மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 3’.. வெளியீட்டு தேதி & முக்கிய அப்டேட்!!
வானில் வெடித்த விமான எஞ்சின்.. பயத்தில் உறைந்த பயணிகள்.. ஷாக் சம்பவம்!!
தங்கத்துக்கு நிகரான மதிப்பை தரும் அரிய மரம்.. அதிசயம்!!