AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையின் மர்ம பங்களா – அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு என்ன நடந்தது?

Ashok Nagar Mystery House: சென்னையில் அசோக் நகரில் உள்ள ஒரு மர்மமான வீடு சமூக வலைதலங்களில் டிரெண்டாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் அந்த வீடியோவிற்குள் நுழைந்து ரீல்ஸ் எடுத்து வருகின்றனர். உண்மையில் அந்த வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.

சென்னையின் மர்ம பங்களா – அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு என்ன நடந்தது?
வைரலாகும் அசோக் நகரின் பாழடைந்த வீடு
Karthikeyan S
Karthikeyan S | Published: 17 Feb 2026 19:33 PM IST

சென்னை, பிப்ரவரி  17 : சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள பாழடைந்த வீடு தற்போது சமூக வலைதளங்களில், ரீல்ஸ்களில் டிரெண்டாகி வருகிறது. பலரும் அந்த வீட்டுக்குள் சென்று ரீல்ஸ் எடுத்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் அப்பகுதியினரிடையே ரீல்ஸ் எடுக்க வருபவர்களால் அசௌகரியத்தை சந்தித்து வருகின்றனர். அந்த பாழடைந்த வீடு 20 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டிய நிலையிலேயே இருக்கிறது. வீட்டின் முன் பழைய கார், அழுக்கேறிய பழைய புகைப்படங்கள் வீடு முழுக்க சிதறி கிடக்கும் பொருட்கள் என அந்த வீடு காண்போரை கலக்கமடைய செய்கிறது. டிமாண்டிக் காலனி போல இந்த வீடும் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

20 ஆண்டுகளாக இந்த வீடு பாழடைந்த நிலையில் இருக்கும் நிலையில் தற்போது நெட்டிஷன்கள் ரீல்ஸ் எடுத்து பகிர்ந்து வருவதால் டிரெண்டாகி வருகிறது. மேலும் பலர் அந்த பகுதிக்கு ரீல்ஸ் எடுக்க நுழைவதால் அந்த பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வீட்டுக்குள் ரீல்ஸ் எடுப்பதற்காக நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு என்ன நடந்தது?

டிமாண்டி காலனி என அழைக்கப்படும் அந்த வீடு யாருடையது? அங்கு என்ன நடந்தது? எதனால் பாழடைந்த நிலையில் இருக்கிறது என பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. தற்போது கிடைத்த தகவலின் படி அந்த வீட்டில் என்ன நடந்தது என தெரிந்து கொள்ளலாம். எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் கனிமவளத்துறையில் பணியாற்றியவர் சரவணன். இவர் தனது மனைவி கஸ்தூரியுடன் இந்த வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு குழந்தைகள் யாரும் இல்லை.

இதையும் படிக்க : மகளிர் விடியல் பேருந்து பயணம்..ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு… தங்கம் தென்னரசின் தங்கமான அறிவிப்பு!

வைரலாகும் வீடியோ

 

 

View this post on Instagram

 

A post shared by kutty…🦋🍭 (@sanjay__candy__)

சரவணன் தனது வீட்டில் நிறைய பணம் மற்றும் நகைகளை வைத்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு சரவணன், மனைவி கஸ்தூரி மற்றும் வேலை செய்யும் அன்பரசி ஆகியோர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். 3 பேரும் இறந்த நிலையில் அந்த வீட்டில் காணப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்த நகைகள் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கின.

இதையும் படிக்க : வேலூர் மயான கொள்ளை திருவிழா.. 60 அடி தேர் கவிழ்ந்து விபத்து.. நடந்தது என்ன?

இந்த சம்பவத்தை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பணம் மற்றும் நகைகளுக்காக அவர்கள் மூவரையும் கொலை செய்தது தெரியவந்தது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 20 வருடங்களாகும் நிலையில் அந்த வீட்டிற்குள் யாரும் நுழைய பயப்படுகின்றனர். மேலும் சரவணனுக்கு வாரிசுகள் இல்லாததால் வீட்டை யாரும் பராமரிக்க முன் வரவில்லை. தற்போது ரீல்ஸ் மோகத்தால் இளைஞர்கள் அந்த வீட்டிற்குள் சென்று வீட்டின் நிலையை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். மேலும் அந்த வீட்டில் அமானுஷ்யங்கள் நிறைந்திருப்பதாகவும் தவறான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.