Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மகளை கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்த தந்தை.. தானும் விபரீத முடிவு.. இதுதான் காரணமா?

Ariyalur Father Kills Daughter, and Killed Himself | அரியலூரில் வாக்குவதம் காரணமாக மகளை கழுத்தை நெறித்து கொலை செய்த தந்தை தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியைம் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகளை கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்த தந்தை.. தானும் விபரீத முடிவு.. இதுதான் காரணமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 May 2025 07:45 AM IST

அரியலூர், மே 12 : அரியலூரில் பெற்ற மகளை கயிற்றால் கழுத்தை நெறித்து கொலை செய்த தந்தை தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தைக்கும் மகளுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த தந்தை இந்த கொடூர செயலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவுர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், வாக்குவாதத்தில் தந்தை தனது மகளை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெற்ற மகளை கழுத்தை நெறித்து கொலை செய்த தந்தை

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் ரவி. ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு செல்வி என்ற மனைவியும் ரஞ்சனி ( வயது 19) சத்யா ( வயது 17) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். அவர்களில் ரஞ்சனி கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார். சத்யா பன்னிரண்டாம் வகுப்பு முடித்து உள்ளார். சமீபத்தில் வெளியான பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவில் அவர் 600-க்கு சுமார் 520 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ரவி தான் வாசிக்கும் அதே பகுதியில் புதிதாக வீடு ஒன்றை கட்டி வரும் நிலையில், மூத்த மகள் ரஞ்சினியும் அவரது மகள் செல்வியும் வீடு கட்டும் வேலைகளை கவனித்து வந்துள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு விடுப்பில் இருக்கும் சத்யா, வீட்டு வேலை செய்து வரும் தனது தாய் மற்றும் சகோதரிக்கு உணவு சமைத்து தனது தந்தை மூலம் அனுப்பி வந்துள்ளார்.

விபரீதத்தில் முடிந்த வாக்குவாதம் – தந்தை மகள் உயிரிழந்த சோகம்

இந்த நிலையில் நேற்று ( மே 11, 2025) மதியம் நீண்ட நேரம் ஆகியும் உணவு வராததால் செல்வியும் ரஞ்சனையும் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு சத்யா கயிற்றால் கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்து கிடந்துள்ளார். அருகில் அவரது தந்தை ரவியும் தூக்கிட்டு தொங்கியுள்ளார். இதனை கண்ட செல்வி மற்றும் ரஞ்சனி கதறி அழுதுள்ளனர். இதற்கு இடையே சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தந்தை மகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் தந்தை தனது மகளை கயிற்றை வைத்து கழுத்தை நிறுத்த கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட தற்கொலை செய்து கொண்டதை போலீசார் தங்களது முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.