PMK Power Struggle: அன்புமணி புறக்கணிப்பு! கூட்டணி முடிவு ராமதாஸூக்கு மட்டுமே.. பாமக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

PMK Internal Conflict: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான அதிகாரப் போர் கட்சியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. செயற்குழு கூட்டத்தில், அன்புமணியின் செயல்பாடுகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 2026 தேர்தல் கூட்டணி முடிவை ராமதாஸ் மட்டுமே எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டது. அன்புமணியின் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு, புதிய நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. இந்த சர்ச்சை பாமகவின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

PMK Power Struggle: அன்புமணி புறக்கணிப்பு! கூட்டணி முடிவு ராமதாஸூக்கு மட்டுமே.. பாமக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

பிரதமர் மோடியுடன் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ்

Updated On: 

08 Jul 2025 21:48 PM

விழுப்புரம், ஜூலை 8: பாமக நிறுவனர் ராமதாஸ் (Ramadoss) மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramdoss) இடையே நடத்து வரும் பையானது, கட்சிக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தந்தையும், மகனுக்கும் இடையிலான வேறுபாடுகள் இரத்த பந்தத்தில் ஒன்று கூடினாலும், அரசியலில் இந்த மோதல் நீடிக்கக்கூடும் என்று பாமகவின் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், அன்புமணி ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்க பாமக (Pattali Makkal Katchi) நிறுவனர் ராமதாஸ்-க்கு அதிகாரம் வழங்கி பாமக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அக்கட்சிக்குள் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமதாஸூக்கு அதிகாரம்:

விழுப்புரத்தை அடுத்த திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று அதாவது 2025 ஜூலை 8ம் தேதி நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அக்கட்சிக்குள் கருத்து வேறுபாடு நிலவியது எடுத்துக்காட்டியது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு தந்தை ராமதாஸ் – மகன் அன்புமணி ராமதாஸ் இடையே அதிகார பகிர்வு காரணமாக மோதல் நிலவி வருகிறது. இதன் காரணமாக, அன்புமணி ஆதரவாளர்களை நீக்கி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு வந்தார். அதேநேரத்தில், பாமகவில் நிர்வாகிகளை நீக்கம், சேர்க்கும் சேர்க்கும் அதிகாரம் தனக்கு மட்டும் இருப்பதாக அன்புமணி தெரிவித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று அதாவது 2025 ஜூலை 8ம் தேதி அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாக குழுவை கலைப்பதாக ராமதாஸ் அறிவித்ததாக கூறப்படுகிறது. அதன்படி, 21 பேர் கொண்ட புதிய நிர்வாக குழுவை ராமதாஸ் நியமித்ததாகவும், அதில் அன்புமணி ராமதாஸ் பெயர் இல்லை என்றும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு கூட்டம் இன்று அதாவது 2025 ஜூலை 8ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது, பாமக செயற்குழு கூட்டத்தில் கீழ் இருக்கையில் அமர்ந்திருந்த ராமதாஸின் மகள் காந்திமதியை அழைத்து பாமக நிர்வாகிகள் மேலே அமர வைத்தனர். தொடர்ந்து, பொதுவெளிகளில் பாமக நிறுவனர் ராமதாஸை அவமதிக்கும் வகையில் அன்புமணி ராமதாஸ் பேசி வருவதாகவும், பாமக தலைவர் பதவியை மீண்டும் அபகரிக்கும் எண்ணத்தில் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அன்புமணி ராமதாஸ் செயல்படுவதாகவும் அக்கட்சியின் மாநில செயற்குழுவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

கூட்டணி முடிவுக்கு ராமதாஸூக்கு மட்டுமே:

வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி முடிவை எடுக்க பாமக நிறுவனர் ராமதாஸூக்கு மட்டுமே அதிகாரம் என வலியுறுத்தி பாமக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுவெளிகளில் பாமக கட்சி நிறுவனர் ராமதாஸின் பேச்சுக்கு கட்டுப்படாமல் செயல்படுவது, கட்சிக்கு களங்கத்தை உருவாக்கும் வகையில் செயல்படுவது என அன்புமணி ராமதாஸூக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து, இப்படியான செயலுக்கு அன்புமணி ராமதாஸ் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.