கோலாகலமாக தொடங்கிய அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு.. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு..

Alanganallur Jallikattu: ஒருபக்கம் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், மற்றொரு பக்கம் ஜல்லிக்கட்டு போட்டிகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, மதுரையில் கோலகலமாக தொடங்கியது.

கோலாகலமாக தொடங்கிய அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு.. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு..

கோப்பு புகைப்படம்

Updated On: 

17 Jan 2026 08:01 AM

 IST

மதுரை, ஜனவரி 17, 2026: உலகப் புகழ்பெற்ற அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, ஜனவரி 17, 2026 தேதியான இன்று மதுரையில் கோலகலமாக தொடங்கியது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்கிறார். பொதுவாக மதுரையில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ்பெற்றவை. ஏற்கனவே அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இன்று உலகப் புகழ்பெற்ற அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குகிறது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி – முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு:

இந்த போட்டிகளை நேரில் பார்வையிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக அவர் காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு செல்கிறார். ஒருபக்கம் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், மற்றொரு பக்கம் ஜல்லிக்கட்டு போட்டிகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த ரூட்ல போக முடியாது.. நோட் பண்ணுங்க..

1000 காளைகள் – 600 மாடுபிடி வீரர்கள்:

அந்த வகையில், உலகப் புகழ்பெற்ற அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழகமுழுவதும் இருந்து 6,500 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 1,000 காளைகளுக்கு போட்டியில் பங்கேற்க டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டிகளில் 600 மாடுபிடி வீரர்கள் களமிறங்குகின்றனர். அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக இளைஞர்களுக்கும் காளைகளுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். அதில் கார், பைக் உள்ளிட்டவை அடங்கும். சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்படுகிறது. இரண்டாம் பரிசு பெறும் மாடுபிடி வீரர்களுக்கு பைக் வழங்கப்பட உள்ளது.

அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருகை தருகின்றனர். அதே சமயம், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலம் பதிவு செய்துள்ளனர்.

மதுரையில் ட்ரோன்கள் பறக்க தடை:

இந்த போட்டிகள் நடைபெறும் சூழலில், 3,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலமைச்சர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் நிலையில், பிரத்தியேக மேடை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரைக்கு வருகை தருவதை ஒட்டி, அந்தப் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

"சொமேட்டோவில் நடக்கும் மோசடி சம்பவங்களை பகிர்ந்த சிஇஓ".. எச்சரிக்கை மக்களே!!
சீனாவில் அடுத்த சாதனை.. neuromorphic ரோபோட்டிக் eskin எப்படி வேலை செய்யும்?
29 கோடி ரூபாய்க்கு ஏலம் போன மீன்.. ஜப்பானின் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..
ஜப்பானில் முடிக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?