நவ.26 அன்று வங்கக்கடலில் உருவாகும் புயல்.. டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை..

Tamil Nadu Weather Update: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்றும் (24-11-2025) அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவ.26 அன்று வங்கக்கடலில் உருவாகும் புயல்.. டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை..

கோப்பு புகைப்படம்

Published: 

24 Nov 2025 14:38 PM

 IST

வானிலை நிலவரம், நவம்பர் 24, 2025: நேற்று (23-11-2025) மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (24-11-2025) மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுபெறக்கூடும். இது மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். மேலும். நேற்று (23-11-2025) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்றும் (24-11-2025) அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக 25-ஆம் தேதி வாக்கில் (நாளை), குமரிகடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை – தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வலுப்பெறக்கூடும்.

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை:

இது ஒரு பக்கம் இருக்க, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்றும் (24-11-2025) அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அடுத்தடுத்த சுழற்சிகள்.. புயல் உருவாகுமா? வெதர்மேன் சொல்லும் தகவல்..

நாளை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும், அதனை தொடர்ந்து 26 நவம்பர் 2025 அன்று தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை:

27 நவம்பர் அன்று, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், 28 நவம்பர் அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களிலும் கனமழை பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கரூர் கூட்டநெரிசல் சம்பவம்: தவெக ஆனந்த், ஆதவ் அர்ஜூனா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்!!

மேலும், 29 நவம்பர் அன்று, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும்,

நவம்பர் 30 அன்று, திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் குளோன் ஹைபிரிட் அரிசி வகையை உருவாக்கிய சீனா
மக்களின் துயரத்தை துடைக்கும் போன் பூத்
வெனிசுலா அதிபரை பிடிக்க அமெரிக்க வீரர்கள் சென்ற காட்சி.. AI வீடியோ..
ரஷ்யக் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா.. ரஷ்யா கடும் எதிர்ப்பு!