அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள்.. பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..
Rain Alert: அரபிக்கடலில் 20 அக்டோபர் 2025 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும் நிலையில், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், அக்டோபர் 19, 2025: அக்டோபர் 18, 2025 தேதியான நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டி இலட்சத்தீவு பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அக்டோபர் 19, 2025 தேதியான இன்று காலை அதே பகுதியில் நிலவுவதாகவும், இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொட்டப்போகும் மழை:
இதன் காரணமாக, அக்டோபர் 19, 2025 அன்று கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் 20 அக்டோபர் 2025 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும் நிலையில், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், அக்டோபர் 21, 2025 அன்று திருவள்ளூர், சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: வெறிச்சோடிய சென்னை.. 18 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்!
வருகின்ற அக்டோபர் 22, 2025 அன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்:
அக்டோபர் 23, 2025 அன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: குடும்பம் நடத்த வராத மனைவி.. கொலை செய்த கணவன்
மேலும், அக்டோபர் 23, 2025 அன்று வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஈரோடு, நீலகிரி, கோவை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.