பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர விசாரணையில் காவல் துறையினர்..

Bomb Threat To Ramadoss House: அக்டோபர் 19, 2025 அன்று மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி வசிக்கும் வீடுகளிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர விசாரணையில் காவல் துறையினர்..

கோப்பு புகைப்படம்

Published: 

19 Oct 2025 16:38 PM

 IST

சென்னை, அக்டோபர் 19, 2025: விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விழுப்புரம் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு டிஜிபி அலுவலகம் மூலம் தகவல் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் அமைந்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில், காவல் உதவி ஆய்வாளர் தமிழரசன் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் வெடிகுண்டு மிரட்டல்:

தமிழகத்தில் சமீபகாலமாக வெடிகுண்டு தொடர்பான மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அரசியல் கட்சி தலைவர்கள் வீடுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர். சமீபத்திலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் வீடுகளில் வெடிகுண்டு பொருட்கள் வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை வெறும் வதந்தியே என காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கைகள் ஒரு புறம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள்.. பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..

பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்:

இந்த சூழலில், அக்டோபர் 19, 2025 அன்று மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி வசிக்கும் வீடுகளிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தைலாபுரம் இல்லத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் எந்தவித வெடிகுண்டும் இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் அதிகாரிகள் சோதனையை முடித்து புறப்பட்டனர்.

மேலும் படிக்க: வெறிச்சோடிய சென்னை.. 18 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்!

மேலும், ராமதாஸ் இல்லத்தின் முன்பாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் அன்புமணி ராமதாஸ் இல்லத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது, வெடிகுண்டு மிரட்டல் என்பது வெறும் புரளி என்பதை உறுதிப்படுத்தினர்.

காவல்துறையினர் தீவிர விசாரணை:

ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டல், அக்கட்சியின் உள்ளகத்தில் சிறிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிரட்டல் விடுத்த நபர் யார்? ஏன் இப்படி மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்? என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.