டிக்கெட் இல்லாமல் ராமேஸ்வரம் வந்த 80 வட மாநில பயணிகள் – ரூ.24,000 அபராதம் விதிப்பு
Train Travel Violation: மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் 80க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணித்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் அபராதம் விதிக்கப்பட்டதில் மொத்தம் ரூ.24,000 அபராதம் வசூலானதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த வடமாநில பயணிகள்
மதுரை, டிசம்பர் 20 : மதுரை – ராமேஸ்வரம் (Rameshwaram) இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலில், டிக்கெட் இன்றி பயணம் செய்ததாக 80 வடமாநில பயணிகளுக்கு ரூ.24,000 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக தென் மாநிலங்களை சேர்ந்த இந்துக்கள் காசிக்கு செல்வதை போல, வட மாநிலங்களைச் சேர்ந்த பலர் குடும்பத்துடன் ராமேஸ்வரம் வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ரயில் மூலமாக ராமேஸ்வரம் வருவதால் மதுரை – ராமேஸ்வரம் இடையே ரயில் எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படும்.
டிக்கெட் எடுக்காமல் வந்த வட மாநில பயணிகள்
இந்த நிலையில், டிசம்பர் 20, 2025 அன்று மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற பயணிகள் ரயிலில், ராமேஸ்வரம் செல்வதற்காக 100க்கும் மேற்பட்ட வடமாநில பயணிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அதிக அளவில் பொருட்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ரயிலில் உள்ள பிற பயணிகள் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்தனர்.
இதையும் படிக்க : பள்ளி பேருந்தில் வந்த எமன்…2 வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த சோகம்…கிருஷ்ணகிரியில் சம்பவம்!
இதனைத் தொடர்ந்து, டிக்கெட் பரிசோதகர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சில வடமாநில பயணிகள் டிக்கெட் இன்றி பயணம் செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக டிக்கெட் பரிசோதகர்கள் மானாமதுரை ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். பின்னர் மானாமதுரை ரயில் நிலையம் வந்ததும் மேலும் சில டிக்கெட் பரிசோதகர்கள் ரயிலில் ஏறினார்.
ரூ.24,000 அபராதம்
மணமதுரையில் ரயில் நிறுத்தப்பட்டு, அனைத்து பெட்டிகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் டிக்கெட் பரிசோதகர்கள் மேற்கொண்ட இந்த சோதனையில், 80க்கும் மேற்பட்ட வடமாநில பயணிகள் டிக்கெட் இன்றி பயணம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, டிக்கெட் இன்றி பயணம் செய்த ஒவ்வொரு பயணிக்கும் டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து தலா ரூ.300 அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் மொத்தமாக ரூ.24,000 அபராதம் வசூலிக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க : இரவில் அதிக நேரம் படிக்காதே என கூறிய பெற்றோர்.. மனமுடைந்த பிளஸ் 2 மாணவன் விபரீத முடிவு!
இந்த நிலையில் அபராதம் விதிக்கப்பட்டவர்களில் சிலர் மட்டுமே டிக்கெட் பரிசோதகர்களிடம் தொகையை செலுத்தியதாகவும் மேலும் சிலர் ராமேஸ்வரத்தில் இறங்கி அபராதம் செலுத்தாமல் தப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வட மாநிலத்தை சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து சட்டப்படி குற்றம் எனவும், டிக்கென்றி பிடிக்கப்பட்டால் அபராதமும் சமயத்தில் சிறை தண்டனையும் விதிக்கப்படும் எனவும் ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ரயில்களில் டிக்கெட் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.