‘சுட்டுக் கொல்லனும்’ திருவள்ளூரில் சிறுமிக்கு நடந்த கொடூரம்… தாய் கண்ணீர்மல்க பேட்டி!

Tiruvallur Crime News : திருவள்ளூரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்த நபரை பிடிக்க வேண்டும் என தாய் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். மேலும், அந்த நபரை சுட்டுக் கொல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

சுட்டுக் கொல்லனும்  திருவள்ளூரில் சிறுமிக்கு நடந்த கொடூரம்... தாய் கண்ணீர்மல்க  பேட்டி!

சிறுமி பாலியல் வன்கொடுமை

Updated On: 

18 Jul 2025 23:08 PM

 IST

திருவள்ளூர், ஜூலை 18 : திருவள்ளூர் மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சம்பவம்  கடந்த வாரம் நடந்த நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  சிறுமியின் பெற்றோர் கூறியுள்ளார். அதோடு,  எனது மகளுக்கு ஏற்பட்டது போல, வேறு யாருக்கும் நிகழக்கூடாது என்றும், அந்த நபரை சுட்டுக் கொல்ல வேண்டும் என தாய் கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார்.  2025 ஜூலை 12ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆதம்பாக்கத்தில் ரயில் நிலையம் அருகே 8 வயது சிறுமி நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த மர்ம நபர், சிறுமியை பின் தொடர்ந்துள்ளார்.

திருவள்ளூரில் சிறுமிக்கு நடந்த கொடூரம்

பின்னர், சிறிது நேரம் கழித்து சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை சென்றுள்ளார். பின்னர், அந்த நபருக்கு செல்போன் அழைப்பு வரவே, அந்த நேரத்தில் சிறுமி உடனே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். முகத்தில் காயங்களுடன் சிறுமி வீட்டிற்கு வந்து தனது தாயுடன் நடந்தவற்றை கூறி இருக்கிறார். இதனை அடுத்து, அதிர்ச்சி அடைந்த தாய், ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தள்ளார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரையும் போலீசார் பிடிக்கவில்லை. மேலும், சிறுமி நடந்து சென்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் பின், தொடர்ந்து சென்று வலுக்கட்டாயமாக இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.

Also Read : திருவாரூர் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி: குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு

மேலும், அந்த நபரை கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  மேலும்,  அந்த நபரை பிடிக்க சிறப்பு படை  போலீசார் தேடி வருகின்றனர். இந்த சூழலில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயர்ர் கண்ணீர் மல்க் பேட்டி அளித்துள்ளார்.

தாய் கண்ணீர்மல்க பேட்டி

அவர் பேசுகையில், “பள்ளி முந்து பாட்டி வீட்டிற்கு சென்றபோது, ஒருவர் என் மகளை இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது, அங்கிள் என்னை விட்டுருங்க.. அடிக்காதீங்க என்னை கஷ்டப்படுத்தாதீங்கன்னு என் மகள் அழுதுருக்கா.

ஆனால், கத்தினால் கொலை செய்துவிடுவேன் என அந்த நபர் மிரட்டி இருக்கிறார். என் மகளை அடிச்சு, வாய் எல்லாம் ரத்தம் வர வெச்சு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். என் மகனை வன்கொடுமை செய்த அந்த நபர் யார் என்று காவல்துறை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. உடனடியாக அந்த நபரை காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும்.

Also Read : ஏன் லேட்டா வந்தீங்க? கேள்வி கேட்ட ஆசிரியரை மது பாட்டிலால் தாக்கிய மாணவர்கள்.. சிவகாசியில் அதிர்ச்சி

எனது மகளுக்கு ஏற்பட்டது போல வேறு யாருக்கும் நிகழக்கூடாது. அந்த நபரை சுட்டுக் கொல்ல வேண்டும்” என தெரிவித்தார். இதுகுறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், “குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தர காவல்துறை நடவடிக்கை எடுக்கும். தனிப்படைக்ள அமைக்கப்பட்டுள்ளன. சிறுமிக்கு அரசு சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும்” என கூறினார்.

Related Stories
பருவமழைக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார்.. ஆய்வு மேற்கொண்ட மின்சாரதுறை அமைச்சர் சிவசங்கர்..
நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும் – தீபாவளி வாழ்த்து சொன்ன எடப்பாடி பழனிசாமி..
சென்னையில் தீபாவளி காலை பொழுது மழையுடன் தொடங்கும்.. பிற மாவட்டங்களில் எப்படி இருக்கும் – பிரதீப் ஜான் சொன்ன தகவல்..
வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு.. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு..
தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை.. 58 சதவீதம் அதிக மழை பதிவு – தலைவர் அமுதா..
பழைய மடைமாற்றக் கதைகளைக் கொண்டு வர வேண்டாம்.. அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த அண்ணாமலை..