பள்ளியில் மது அருந்திய மாணவிகள்…6 பேர் சஸ்பெண்ட்!
Students Consuming Alcohol At School: திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் உள்ள பிரபல பள்ளியில் பயிலும் மாணவிகள் வகுப்பறையில் அதிர்ச்சியூட்டும் செயலில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ பரவிய நிலையில், பள்ளி நிர்வாகம் 6 மாணவிகள் சஸ்பெண்ட் செய்யது உத்தரவிட்டது .

பள்ளியில் மது அருந்திய மாணவிகள்
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில் உள்ள முருகன்குறிச்சியில் பிரபல பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், பாளையங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலர் பள்ளியின் வகுப்பறையின் உள்ளே சீருடையில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இது குறித்து தகவல் அறிந்த பள்ளி கல்வித் துறை மற்றும் பள்ளி நிர்வாகம் அந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டது.
6 பள்ளி மாணவிகள் சஸ்பெண்ட்
இதில், அந்த பெண்கள் பள்ளியை சேர்ந்த 9- ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் சிலர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த மாணவிகளின் பெற்றோர்களை பள்ளிக்கு வர வைத்து பள்ளி நிர்வாகம் பேசியிருந்தது. இதைத் தொடர்ந்து, மது அருந்தியதாக 6 மாணவிகளை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. மேலும், இந்த மாணவிகள் மதுக் கடைக்கு சென்று மதுவை வாங்கியது எப்படி. இந்த மதுவை பள்ளியில் வளாகத்துக்குள் கொண்டு வந்தது எப்படி என்பது தொடர்பான விசாரணையை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.
மேலும் படிக்க: தவறி விழுந்து பலியான கர்ப்பிணி பெண்.. 10 நாட்களுக்கு பின் வெளிவந்த உண்மை.. யாரும் எதிர்பாராத திடீர் திருப்பம்..
பள்ளிக் கல்வித் துறை விசாரணை
மேலும், மாணவிகள் மது பாட்டிலை பள்ளிக்கு எடுத்து வந்ததை ஆசிரியர்கள் கவனிக்காமல் விட்டது எப்படி. அந்த வகுப்பறைக்கு ஆசிரிய, ஆசிரியர்கள் செல்லாமல் இருந்தது ஏன் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்த பிரபல பள்ளியில் வகுப்பறையின் உள்ளே பள்ளியின் சீருடையில் மாணவிகள் மது அருத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் மாணவ, மாணவிகள்
இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மாணவ, மாணவிகளின் செயல்பாடுகள் முகம் சுளிக்கும் வகையில் நடைபெற்று வருகின்றன. இதில், பள்ளி மாணவர்கள் சீருடைகள் பொது இடங்களில் புகை பிடிப்பதும், மது அருந்துவதும் என்பன உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல, மாணவிகளும் பள்ளியின் சீருடை வெளியே சுற்றுவதும், மது அருந்துவதுமாக ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: ஓடும் ரயில் முன் பாய்ந்து பிளஸ் 1 மாணவர் தற்கொலை – திருவள்ளூர் அருகே அதிர்ச்சி சம்பவம் – என்ன நடந்தது?