திருப்பதி சென்ற திருவண்ணாமலை பஸ் விபத்து.. 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்.. விவரம்!

30 Severely Injured in Tirupati Highway Crash | தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு சென்ற பேருந்து, திருப்பதியில் விபத்துக்குள்ளான நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

திருப்பதி சென்ற திருவண்ணாமலை பஸ் விபத்து.. 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்.. விவரம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

12 May 2025 08:11 AM

திருப்பதி, மே 12 : தமிழகத்தில் இருந்து திருப்பதி நோக்கி சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயமடைந்துள்ளனர். திருவண்ணாமலையில் இருந்து திருப்பதிக்கு சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பெரும்பாலும் குழந்தைகள் என கூறப்படுகிறது. இந்த நிலையில், திருவண்ணாமலையில் இருந்து திருப்பதிக்கு சென்று பேருந்து விபத்துக்குள்ளானது எப்படி, ஏதேனும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

திருப்பதி சென்ற திருவண்ணாமலை பஸ் விபத்து – 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்

தமிழகத்தின் திருவண்ணாமலையில் இருந்து திருப்பதிக்கு பக்தர்களை ஏற்றி சென்ற ஆர்டிசி பேருந்து இன்று ( மே 12, 2025) நள்ளிரவு கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இது சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்துள்ள 30 பேரில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என கூறப்படுகிறது