3 மாதங்களில் கசந்த திருமண வாழ்க்கை.. ரயில்வே சுரங்கப்பாதையின் மீது இருந்து குதித்து உயிரை விட்ட நபர்!
3 Month Old Marriage Ends in Tragedy | திருவள்ளூரில் மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணமான இளம் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கணவரிடம் கோபித்துக்கொண்டு மனைவி தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், மனமுடைந்த கணவர் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

மாதிரி புகைப்படம்
திருவள்ளூர், ஜூலை 11 : திருமணமான மூன்றே மாதங்களில் மணைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில், நேரில் சென்று அழைத்தும் வராததால் மனமுடைந்த கணவர் ரயில்வே சுரங்கப்பாதையின் மீது இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான நாள் முதலே கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த நபர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்த நிலையில், கணவன் மனைவி இடையே நடந்தது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கணவனிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற மனைவி
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காமராஜர் நகர் பகுதியில் சேர்ந்தவர் தீனதயாளன். 22 வயதான இவர் அம்பத்தூரில் உள்ள தொழிற்பேட்டையில் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் லாரன்ஜினா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று மாதங்களே ஆகும் நிலையில் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு லாரன்ஜினா தனது தாயின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதையும் படிங்க : மகளின் காதலுக்கு எதிர்ப்பு.. தம்பதி எடுத்த விபரீத முடிவு.. நாமக்கல்லில் அதிர்ச்சி!
குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி – மனமுடைந்த கணவர் தற்கொலை
இந்த நிலையில் தனது மாமியார் வீட்டிற்கு சென்ற தீனதயாளன், மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் லாரன்ஜினா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அது மட்டுமன்றி தான் கழுத்தில் அணிந்திருந்த தாலியையும் அவரது கணவரின் கண் முன்னால் கழட்டி வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தீனதயாளன் தனது மாமியார் வீட்டின் அருகே உள்ள ரயில்வே சுரங்க பாதையில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.