தைப்பொங்கல் பண்டிகை.. தமிழர் வாழ்வு செழித்திட முதல்வர் ஸ்டாலின் உட்பட தலைவர்கள் வாழ்த்து!!
2026 Thai Pongal festival: புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கலெனப் பொங்கிட, இனித்திடும் செங்கரும்பைச் சுவைத்து, செங்கதிரோனைப் போற்றிடும் #தமிழர்_திருநாள்-இல், தமிழர் வாழ்வு செழித்திட வாழ்த்துகிறேன்! தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கிடும் இந்த மகிழ்ச்சிப் பொங்கல், #DravidianModel 2.0-வில் பன்மடங்காகும் என்று அவர் கூறியுள்ளார்.

தலைவர்கள் பொங்கல் வாழ்த்து
சென்னை, ஜனவரி 15: தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் விழா தமிழகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடைகள் உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு தை மகளை தமிழர்கள் வரவேற்று வருகின்றனர். இயற்கை மற்றும் உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என 4 நாட்கள் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், பொங்கல் பண்டிகைக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: தித்திக்கும் தைப்பொங்கல்.. தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாட்டம்!!
பிரதமர் மோடி வாழ்த்து:
இதுகுறித்து பிரதமர் மோடி அவரது எக்ஸ் பக்கத்தில், தமிழ் கலாச்சாரத்தையும், இயற்கையுடனான நமது பிணைப்பையும் பொங்கல் கொண்டாடுகிறது. இந்தப் பண்டிகை அனைவரின் வாழ்க்கையிலும் செழிப்பையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும். இயற்கைக்கு மரியாதை செலுத்துவதை ஒரு வாழ்க்கை முறையாக மாற்ற பொங்கல் நம்மை ஊக்குவிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து:
புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கலெனப் பொங்கிட, இனித்திடும் செங்கரும்பைச் சுவைத்து, செங்கதிரோனைப் போற்றிடும் #தமிழர்_திருநாள்-இல், தமிழர் வாழ்வு செழித்திட வாழ்த்துகிறேன்!
தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கிடும் இந்த மகிழ்ச்சிப் பொங்கல், #DravidianModel 2.0-வில்… pic.twitter.com/SguwduVKr5
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) January 15, 2026
அந்தவகையில், முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கலெனப் பொங்கிட, இனித்திடும் செங்கரும்பைச் சுவைத்து, செங்கதிரோனைப் போற்றிடும் #தமிழர்_திருநாள்-இல், தமிழர் வாழ்வு செழித்திட வாழ்த்துகிறேன்! தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கிடும் இந்த மகிழ்ச்சிப் பொங்கல், #DravidianModel 2.0-வில் பன்மடங்காகும்! #வெல்வோம்_ஒன்றாக! என்று பதிவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி வாழ்த்து:
உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில்,
தமிழக மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து,புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.,
புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய… pic.twitter.com/XDb1jaZfSW— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) January 15, 2026
உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்வதாகவும், பொங்கல் திருநாளில் தமிழக மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ வேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நயினார் நாகேந்திரன் வாழ்த்து:
பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை… செழிக்கட்டும்!
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடியாம்…! நம் தமிழ் குடியின் மகத்தான விழாவான பொங்கல் திருநாளில்,
தேனாய், செங்கரும்பாய், திகட்டாது தித்தித்திட…நம் அனைவரின் வாழ்விலும் இன்பம் பொங்கி… மகிழ்ச்சி… pic.twitter.com/DYqwy07ZN7
— Nainar Nagenthran (@NainarBJP) January 15, 2026
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், உழவுத் தொழிலை மையமாகக்கொண்ட தமிழரின் வாழ்வியலோடு இணைந்த பண்பாட்டுக் கொண்டாட்டமான பொங்கல் திருநாளில், உலகத் தமிழர் அனைவருக்கும் எனது உளமர்ந்த பொங்கல் வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: உலக புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு போட்டி… 15,047 காளைகள்-5,234 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு
செல்வப்பெருந்தகை வாழ்த்து:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில், உழைப்பை போற்றும் உன்னத திருவிழாவான இந்த நன்னாளில் இல்லந்தோறும் மகிழ்ச்சி பொங்கி, நம் அனைவரின் உள்ளத்திலும் ஊக்கமும், உத்வேகமும் சிறந்து விளங்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.