பள்ளி பேருந்தில் வந்த எமன்…2 வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த சோகம்…கிருஷ்ணகிரியில் சம்பவம்!

Girl Baby Dies After Hit By School Bus: கிருஷ்ணகிரியில் பள்ளி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பள்ளி பேருந்தில் வந்த எமன்...2 வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த சோகம்...கிருஷ்ணகிரியில் சம்பவம்!

பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் குழந்தை பலி

Updated On: 

20 Dec 2025 14:15 PM

 IST

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள மாதம்பதி பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தணிகாசலம். இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர்களுக்கு தமிழ்ச் செல்வி மற்றும் நிஷா (வயது 2) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகளான தமிழ்ச்செல்வி அந்தப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். இந்த நிலையில், இன்று சனிக்கிழமை காலை (டிசம்பர் 20) தமிழ்ச் செல்வியை பள்ளிக்கு அனுப்புவதற்காக தாய் ஐஸ்வர்யா தனது 2- ஆவது மகள் நிஷாவையும் அழைத்துச் சென்றார். அப்போது, பேருந்து நிலையத்தில் பள்ளியின் பேருந்துக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது, பள்ளி பேருந்து வந்த போது, மூத்த மகள் தமிழ்ச் செல்வியை பேருந்தில் ஏற்றி விட்டார்.

பள்ளி பேருந்தின் அருகே சென்ற குழந்தை

அப்போது, கீழே இறக்கி விடப்பட்டிருந்த 2- ஆவது மகள் நிஷா பேருந்தின் அருகில் சென்றதாக கூறப்படுகிறது. இதனை அறியாத பேருந்து ஓட்டுநர் பேருந்தை இயக்கினார். அப்போது, நிஷா பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சப்தமிட்டார். உடனே, உஷாரான பேருந்து ஓட்டுநர் பேருந்தை உடனடியாக நிறுத்தினார்.

மேலும் படிக்க: இரவில் அதிக நேரம் படிக்காதே என கூறிய பெற்றோர்.. மனமுடைந்த பிளஸ் 2 மாணவன் விபரீத முடிவு!

பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த குழந்தை

ஆனால், பள்ளி பேருந்தின் சக்கரத்தில் குழந்தை நிஷா சிக்கி உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதை பார்த்த குழந்தையின் தாய் ஐஸ்வர்யா கதறி அழுதார். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மத்தூர் போலீசார் வழக்குப் பதிவு

இது தொடர்பாக குழந்தையின் தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பள்ளி பேருந்தின் ஓட்டுனரிடமும் விசாரித்து வருகின்றனர். பள்ளி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கெனவே இரு சம்பவங்களில் இரு குழந்தைகள் பலி

இந்த சம்பவத்தை போல, வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் ஜெயச்சந்திரன் என்பவரின் 4 வயது மகளான கிருத்திஷா பள்ளி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான வேலுவின் ஒரு வயது ஆண் குழந்தை பள்ளி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது.

மேலும் படிக்க: பாம்பை கடிக்க விட்டு தந்தையை கொன்ற கொடூர மகன்கள்.. அரசு வேலை, ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணத்தை பெற மாஸ்டர் பிளான்..

எதிர்பார்ப்பை எகிற செய்யும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் டிஸ்குளோசர் டே படம்
மார்பக புற்றுநோய்.. தழும்புகளை முதன்முறையாக வெளிப்படுத்திய ஏஞ்சலினா ஜோலி
பலத்த காற்றால் சாய்ந்த சுதந்திர தேவி சிலை - பிரேசிலில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
கைலாச மலை – யாரும் ஏற முடியாத தீராத மர்மம்