திருச்சியில் மாணவர்களிடயே மோதல்.. 13 வயது சிறுவன் பலி – பரபரப்பு சம்பவம்

Student Clash Turns Fatal: திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் அருகே மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விளையாடிக்கொண்டிருக்கும்போது ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. மாணவனின் திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சியில் மாணவர்களிடயே மோதல்.. 13 வயது சிறுவன் பலி - பரபரப்பு சம்பவம்

மாதிரி புகைப்படம்

Updated On: 

13 Mar 2026 16:07 PM

 IST

திருச்சி, மார்ச் 13 : திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் அருகே மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சரவணன் என்பவரின் மகன் செல்வம். இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். இவர் அதே பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் பாரதி என்கிற மற்றொரு சிறுவனுடன் வாலிபால் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார். இந்த நிலையில் விளையாடும்போது சரவணனின் தலையில் பந்து பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சரவணனும் பாரதியும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த இருவரது பெற்றோரும் இருவரையும் சமதானம் செய்து வீட்டு அழைத்து சென்றுள்ளனர்.

மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் சிறுவன் பலி

இதனையடுத்து வீட்டு வந்த சில மணி நேரங்களில் சிறுவன் சரவணன் வாந்தி எடுத்து மயக்கமாகியுள்ளார். இதனையடுத்து அவரது பெற்றோர் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இதனைக் கேட்டு சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிக்க : தூத்துக்குடி வழக்கில் திடீர் திருப்பம்.. மாணவியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்படவில்லை.. காவல்துறை தகவல்..

இந்த சம்பவம் தொடர்பாக துறையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பந்து தலையில் பட்டதால் சிறுவன் உயிரிழந்தாரா? அல்லது சிறுவனின் தாக்குதலில் உயிரிழந்தாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடிக்கொண்டிருக்கும் போது ஏற்பட்ட மோதலில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதோ போல திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மன்னார்கோவில் என்ற பகுதியில் 11 ஆம் வகுப்பு மாணவனுக்கும் மற்றொரு சிறுவனுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவரையும் அப்பகுதி மக்கள் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் ஆத்திரம் அடங்காத மாணவன் மற்றொருவரின் வீட்டுக்கு நேரில் சென்று அரிவாளால் வெட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் சிறுவன் ரத்த வெள்ளத்தில் படுகாயமைடந்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க : கள்ளத்தொடர்பு சந்தேகம்… கணவரை உயிருடன் எரித்த மனைவி? நடந்தது என்ன?

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு சிறுவர்களிடையே ஏற்பட்ட தகராறு தற்போது அரிவாளால் தாக்கும் அளவுக்கு சென்றிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் சமீப காலமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Follow Us
கோடைகாலத்தில் மண்பானை தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் - மருத்துவர்கள் ஆச்சரிய தகவல்
மாணவர்கள் செய்த 'பிராங்க்'.. அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆசிரியர் உயிரிழப்பு!
மினாப் பள்ளி தாக்குதல்: அமெரிக்கா மீது சந்தேகம்
மும்பையில் எரிவாயு தட்டுப்பாடு..20% உணவகங்கள் மூடல்..