சட்டமன்ற தேர்தலுக்கு 10,633 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்!
Special Buses For 2026 Assembly Election | 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மாதிரி புகைப்படம்
சென்னை, ஏப்ரல் 17 : தமிழகத்தில் விரைவில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் (2026 Tamil Nadu Assembly Election) நடைபெற உள்ளது. ஏப்ரல் 23, 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அதற்கான தீவிர ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கு வாக்களிக்க பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏப்ரல் 23-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தல்
ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அனைத்து பொதுமக்களும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தலை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. அதற்கு ஏதுவாக அனைத்து அரசு துறை ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமன்றி தனியார் நிறுவனங்களும் அன்றைய தினம் கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டும் என கூறியுள்ளது.
இதையும் படிங்க : அன்புமணிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை.. நீதிமன்றத்தில் ராமதாஸ் அதிரடி மனு!
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி தனியார் நிறுவனங்கள் அன்றைய தினம் ஊழியர்களுக்கு விடுமுறைன் அளித்துள்ளன. இந்த நிலையில், ஏராளமான பொதுமக்கள் பணியின் நிமித்தமாக சொந்த ஊர்களை விட்டு வெளியூரில் வசிக்கும் நிலையில், அவர்கள் அனைவரும் வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
தேர்தலுக்கு 10,633 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்
சட்டமன்ற தேர்தலுக்கு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக ஏப்ரல் 21, 22 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்களுக்கு சேர்த்து சுமார் 10,633 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் இருந்து தினசரி இயக்கூடிய 2,092 பேருந்துகள் உடன் சுமார் 5,574 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து கழகம் கூறியுள்ளது.
இதையும் படிங்க : மு.க.ஸ்டாலின் ஐயா ஒரு கீ கொடுக்கும் பொம்மை.. அண்ணாமலையின் அனல் பறக்கும் பேச்சு!