WPL 2026: WPL 2026 சீசனில் முதல் ஹாட்ரிக்.. 5 விக்கெட்கள் எடுத்து அபாரம்.. கலக்கிய டெல்லி வீராங்கனை நந்தனி சர்மா!
Nandani Sharma Hat-trick: நந்தனி சர்மா மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் ஹாட்ரிக் எடுத்த 4வது பந்து வீச்சாளர் ஆனார். இவருக்கு முன்னதாக இஸி வோங் (மும்பை இந்தியன்ஸ்), கிரேஸ் ஹாரிஸ் (யுபி வாரியர்ஸ்), மற்றும் தீப்தி சர்மா (யுபி வாரியர்ஸ்) ஆகியோர் உள்ளனர்.

நந்தனி சர்மா
2026 மகளிர் பிரீமியர் லீக் (WPL 2026) சீசனின் நான்காவது போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் (DC) மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் (GG) அணிகள் நவி மும்பையில் உள்ள DY பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று அதாவது 2026 ஜனவரி 11ம் தேதி மோதின. இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சாளர் சிறப்பாக பந்துவீசி ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனையை படைத்தார். அதாவது இந்த ஓவர் டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சாளர் 2026 மகளிர் பிரீமியர் லீக் சீசனின் முதல் ஹாட்ரிக் எடுத்தார். ஹாட்ரிக் மட்டுமின்றி, இந்த பந்து வீச்சாளர் ஒரு ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையையும் படைத்தார்.
ALSO READ: நியூசிலாந்து அணியில் தமிழக வீரர்… கையில் ரஜினி டாட்டூ.. யார் இந்த ஆதித்யா அசோக்?
24 வயது பந்து வீச்சாளர் ஹாட்ரிக் எடுத்து சாதனை:
🚨 𝐇𝐚𝐭-𝐭𝐫𝐢𝐜𝐤 𝐀𝐥𝐞𝐫𝐭 🚨
Nandni Sharma, you beauty 👌 #TATAWPL‘s 4th hat-trick 🫡
Updates ▶️ https://t.co/owLBJyAIzb #TATAWPL | #KhelEmotionKa | #DCvGG | @DelhiCapitals pic.twitter.com/Crnlx2PW5I
— Women’s Premier League (WPL) (@wplt20) January 11, 2026
இந்தப் போட்டியில், டெல்லியின் 24 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளர் நந்தனி சர்மா ஹாட்ரிக் எடுத்தார். சண்டிகரைச் சேர்ந்த 24 வயதான நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் நந்தனி 4 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதுவும் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் நந்தனி குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினார். அந்த ஓவரில் மொத்தம் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், கடைசி 3 பந்துகளில் தனது ஹாட்ரிக்கை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கனிகா அஹுஜா, ராஜேஸ்வரி கெய்க்வாட் மற்றும் ரேணுகா சிங் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனையை நந்தனி சர்மா படைத்தார்.
இதன் மூலம், நந்தனி சர்மா மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் ஹாட்ரிக் எடுத்த 4வது பந்து வீச்சாளர் ஆனார். இவருக்கு முன்னதாக இஸி வோங் (மும்பை இந்தியன்ஸ்), கிரேஸ் ஹாரிஸ் (யுபி வாரியர்ஸ்), மற்றும் தீப்தி சர்மா (யுபி வாரியர்ஸ்) ஆகியோர் உள்ளனர். மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் சர்வதேச போட்டியில் விளையாடாத பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் நந்தனி சர்மா பெற்றார். 2026 ஏலத்தில் நந்தனி டெல்லி கேபிடல்ஸ் அணியால் ரூ. 20 லட்சத்திற்கு வாங்கப்பட்டார்.
ALSO READ: நாளை முதல் மகளிர் பிரீமியர் லீக்.. எப்போது யார் மோதுகிறார்கள்? முழு அட்டவணை இதோ!
ஹாட்ரிக் எடுத்த பிறகு நந்தினி சர்மா என்ன சொன்னார்?
ஹாட்ரிக் எடுத்த பிறகு, நந்தனி சர்மா கூறுகையில், ”எனது இலக்கை நோக்கி பந்து வீசுவதில் மட்டுமே எனது கவனம் இருந்தது. ஷஃபாலியும் ஜெமிமாவும் ஒவ்வொரு பந்துக்கும் முன்பு என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். எனது திட்டம் எப்போதும் எளிமையானது, அது எப்போது ஸ்டம்ப்களைத் தாக்குவதுதான். நான் ஹாட்ரிக்கை எதிர்பார்க்கவில்லை. ஆனால், எனது மனதில் எனக்கு விக்கெட்டுகள் கிடைக்கும் என்று சொல்லிக்கொண்டே இருந்தது. எனது முதல் ஓவருக்குப் பிறகு, எனது பந்துவீச்சை மாற்ற முடிவு செய்தேன், அது வேலை செய்தது.” என்று தெரிவித்தார்.