WPL 2026: சர்ச்சைக்குரிய ஸ்டம்பிங்.. அம்பயரிடம் வாக்குவாதம்.. டெல்லி வீராங்கனைக்கு அபராதம்!

DC vs MI: வதோதராவில் உள்ள பிசிஏ ஸ்டேடியத்தில் நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டியின்போது இந்த சம்பவம் நடந்தது. டெல்லின் அணியின் இன்னிங்ஸின் 11வது ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அமன்ஹோத் கவுரின் பந்துவீச்சில் லீயை ரஹிலா ஃபிர்தௌஸ் ஸ்டம்பிங் மூலம் ஆட்டமிழக்க செய்தார்.

WPL 2026: சர்ச்சைக்குரிய ஸ்டம்பிங்.. அம்பயரிடம் வாக்குவாதம்.. டெல்லி வீராங்கனைக்கு அபராதம்!

லிசெல் லீ

Published: 

21 Jan 2026 18:26 PM

 IST

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் (WPL 2026) போட்டியின்போது நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி கேபிடல்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் லிசெல் லீக்கு போட்டி கட்டணத்தின் 10 சதவீத அபராதத்துடன் ஒரு தகுதி இழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 155 ரன்கள் இலக்கை துரத்தும்போது டெல்லி அணிக்காக களமிறங்கிய லிசெல் லீ (Lizelle Lee) 46 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்டம்பிங் மூலம் அவுட் செய்யப்பட்டார். இதன்பிறகுதான் வாக்குவாதம் ஏற்பட்டு மூன்றாவது நடுவர் நீண்ட மறுஆய்வுக்கு பிறகு லீ அவுட் என அறிவித்தார்.

ALSO READ: 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை.. சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்ற இந்திய அணி!

அபராதம் விதிக்க காரணம் என்ன..?


வதோதராவில் உள்ள பிசிஏ ஸ்டேடியத்தில் நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டியின்போது இந்த சம்பவம் நடந்தது. டெல்லின் அணியின் இன்னிங்ஸின் 11வது ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அமன்ஹோத் கவுரின் பந்துவீச்சில் லீயை ரஹிலா ஃபிர்தௌஸ் ஸ்டம்பிங் மூலம் ஆட்டமிழக்க செய்தார்.

ஃபிளிக் ஷாட்டை முயற்சிக்கும்போது லீ பந்தை விட்டார். இதை லாபகமாக பிடித்து மும்பை இந்தியன்ஸ் விக்கெட் கீப்பர் ஸ்டம்பிங் செய்தார். இதை பல கோணங்களையும் ஸ்டம்ப் கேமராவையும் மதிப்பாய்வு செய்த பிறகு, பெயில்கள் விழுந்தபோது லீயின் பேட் கோட்டிற்கு மேலே இருந்ததால் நடுவர்கள் அவுட் என கொடுத்தனர்.

இதனால், லிசெல் லீ களத்தில் இருந்த நடுவர் விருந்தா ரதியிடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். WPL இன் ஊடக ஆலோசனையின்படி , பிரிவு 2.2 இன் கீழ் லெவல் 1 குற்றத்தை லீ ஒப்புக்கொண்டார், இது ஒரு போட்டியின் போது கிரிக்கெட் உபகரணங்களை தவறாகப் பயன்படுத்துவது. வெலல் 1 குற்றச்சாட்டின் கீழ் போட்டி நடுவரின் முடிவின்படி அபராதம் விதிக்கப்பட்டது.

ALSO READ: ஐபிஎல் ஸ்பான்சராக கூகிளின் AI நிறுவனம்.. பிசிசிஐக்கு கொட்டப்போகும் கோடிகள்..!

இருப்பினும், இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 154/5 ரன்கள் எடுத்தது. டெல்லி 19 ஓவர்களில் 155/3 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது.

யார் முதலிடம்..?

WPL 2026 புள்ளிகள் பட்டியலில் RCB முன்னிலை வகிக்கிறது. அந்த அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது, எனவே அது 10 புள்ளிககளைப் பெற்றுள்ளது. இதற்கிடையில், மும்பை இந்தியன்ஸ் , UP வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் தலா நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ளன. மும்பை அதிக போட்டிகளில் விளையாடியுள்ளது, ஆறு, மற்ற அணிகள் தலா 5 போட்டிகளில் விளையாடியுள்ளன.

இயற்கை ஒளியால் டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியுமா? ஆய்வுகள் சொல்வது என்ன?
பணி நீக்கத்தால் தூய்மை பணியாளராக மாறிய இந்தியர்.. ரஷ்ய செய்து நிறுவனம் தகவல்..
மூன்றாம் உலகப்போர்.. பாபா வங்காவின் கணிப்புகள் உண்மையாகுமா?
விமானக் கண்காட்சியின் போது பறவைகள் விபத்து தடுக்க மத்திய அரசின் புதிய முயற்சி.. என்ன தெரியுமா?