IndvsEng : சஞ்சு சாம்சனுக்கு தடை விதிக்கும் ஐசிசி? சர்ச்சையை ஏற்படுத்திய கொண்டாட்டம்

T20 World Cup : டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் ஹெல்மெட்டை வீசி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அது ஐசிசி விதிகளின் படி தவறு என கூறப்படுகிறது. இதனையடுத்து அவருக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

IndvsEng : சஞ்சு சாம்சனுக்கு தடை விதிக்கும் ஐசிசி? சர்ச்சையை ஏற்படுத்திய கொண்டாட்டம்

சஞ்சு சாம்சன்

Published: 

03 Mar 2026 18:29 PM

 IST

டி2 உலகக்கோப்பை 2026 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் 97 ரன்கள் குவித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். முன்பு அவரது திறமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்த நிலையில் தனது பொறுப்பான ஆட்டத்தால் அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்தார். கடைசியாக தோனி ஸ்டைலில் கடைசி 2 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். வெற்றிக்கு பிறகு ஹெல்மெட்டை வீசியறிந்த சஞ்சு சாம்சன் பிரார்த்தனையில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அதுவே அவருக்கு விணையாக மாறியுள்ளது. வெற்றியை சஞ்சு சாம்சன் கொண்டாடிய நிலையில் அது ஐசிசி விதிகளை மீறியுள்ளதாக கூறப்படுகிறது.

சஞ்சு சாம்சனுக்கு தடை?

டி20 உலக்கோப்பை 2026 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியைத் தேடி தந்த சஞ்சு சாம்சன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது சர்ச்சையாக மாறியுள்ளது. குறிப்பாக அவர் ஹெல்மெட்டை வீசி எறிந்தது, ஐசிசி விதிகள் மீறப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்த சஞ்சு சாம்சன், ஹெல்மமெட்டை தரையில் எறிந்தார். பின்னர் முழுங்காலிட்டு கடவுளுக்கு நன்றி தெரிவித்தார். போட்டிக்கு பின்னர் பார்த்தீவ் படேலுடன் பேசிய அவர், இது எனக்கு மிகவும் சிறப்பான தருணம். நான் கடவுளை நம்பும் ஒருவர். அதை பெர்சனலாக வைத்துக்கொள்ள விரும்புகிறேன் ென்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க :  South Africa vs New Zealand: இறுதிப்போட்டிக்கு செல்லுமா தென்னாப்பிரிக்கா? தடை போடுமா நியூசிலாந்து? ஹெட் டூ ஹெட் விவரம் இதோ!

ஐசிசி விதிகள் என்ன சொல்கிறது?

ஐசிசி நடத்தை விதிகள் பிரிவு 2.2வின் படி, கிரிக்கெட் உபகரணங்களை தவறாக பயன்படுத்துதல் அல்லது எறிதல் ஆகியவை தவறான செயலாகும். இது கோபத்திலோ அல்லது உற்சாகத்தின் போதோ நடந்தாலும் விதிகளின் படி அது குற்றமாகும். சமீபத்தில் ஸ்காட்லாரந்து வீரர் ஜார்ஜ் முன்சே ஹெல்மெட்டை எறிந்ததற்காக, அவருக்கு ஒரு டி மெரிட் பாயிண்ட் வழங்கப்பட்டிருந்தது.

இத்தைகய குற்றங்கள் பொதுவாக லெவல் 1 குற்றமாக கருதப்படுகின்றன. லெவல் 1 குற்றங்களுக்கு அதிகபட்சமாக போட்டிக்கான கட்டணத்தில் 50 சதவிகிதம் வரை அபராதமாக விதிக்கப்படும். ஒரு வீரர் 24 மாதங்கள் அதாவது 2 வருடங்களில் 4 டிமெரிட் பாயிண்ட் பெற்றால் மட்டுமே தடை விதிக்கப்படும். அல்லது லெவல் 2 குற்றங்களுக்கு தடை விதிக்கப்படலாம். உதாரணமாக ஹர்மன்ப்ரீத் சம்பவம் லெவல் 2 குற்றமாக கருதப்பட்டதால், அவருக்கு 2 போட்டிகள் விளையாட தடை விதிக்கப்பட்டது.

இதையும் படிக்க :  T20 World Cup: அரையிறுதியில் 4 அணிகள்.. வெற்றியை சூடப்போவது யார்..?

இந்த நிலையில் சஞ்சு சாம்சனுக்கு எதிராக ஐசிசி இதுவரை எந்த நடவடிக்கையும் அறிவிக்கவில்லை. எனினும் சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் குறித்து பரபரப்பு நிலவி வருகிறது. இந்தியா – இங்கிலாந்து அரையிறுதி போட்டி மார்ச் 5, 2026 அன்று மும்பையின் வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டிக்கு முன் சஞ்சு சாம்சனுக்கு என்ன மாதிரியான தண்டனை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

 

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ