West Indies vs Australia: அம்பயருக்கும் தண்டனை கொடுங்கள்.. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தோல்வியால் புலம்பிய ரோஸ்டன் சேஸ்!

Controversial Umpiring Decisions: வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மூன்றாம் நடுவர் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக்கின் சர்ச்சைக்குரிய முடிவுகள் பெரும் விமர்சனத்தை சந்தித்தன. கேப்டன் ரோஸ்டன் சேஸ் நடுவர்களின் தவறான முடிவுகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார். ஆஸ்திரேலியாவின் சிறப்பான இரண்டாவது இன்னிங்ஸ் வெஸ்ட் இண்டீஸின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

West Indies vs Australia: அம்பயருக்கும் தண்டனை கொடுங்கள்.. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தோல்வியால் புலம்பிய ரோஸ்டன் சேஸ்!

ரோஸ்டன் சேஸ்

Updated On: 

29 Jun 2025 08:07 AM

 IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோஸ்டன் சேஸ், கேப்டனாக தனது முதல் போட்டியிலேயே தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா (West Indies vs Australia, 1st Test) இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பார்படோஸின் கென்சிங்டன் ஓவலில் நடைபெற்றது. இங்கு  வெஸ்ட் இண்டீஸ் அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. போட்டியின் தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை வகித்தது, ஆனால், அதன்பிறகு ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது. இதன் போது, ​​3வது நடுவர் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக்கின் சில சர்ச்சைக்குரிய முடிவுகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போட்டிக்குப் பிறகு, ரோஸ்டன் சேஸும் (Roston Chase) தனது கோபத்தை ​​3வது நடுவருக்கு எதிராக வெளிப்படுத்தினார்.

என்ன நடந்தது..?

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இந்தப் போட்டியில், 3வது நடுவர் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் மொத்தமாக 5 முடிவுகளை வழங்கினார். இவை அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. இவற்றில் 4 முடிவுகள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அமைந்ததாக கூறப்படுகிறது. இது போட்டியின் முடிவில் முக்கிய பங்கு வகித்தது. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸுக்கு எதிராகவும் ஒரு முடிவு அறிவிக்கப்பட்டது. இதுவும் சர்ச்சைக்குள்ளானது. அதாவது, போட்டியின் இரண்டாவது நாளில், பாட் கம்மின்ஸின் பந்தில் ரோஸ்டன் சேஸ் எல்பிடபிள்யூ முறையில் அவுட் என அறிவிக்கப்பட்டார். இதனால், ரோஸ்டன் சேஸ் டிஆர்எஸ் பயன்படுத்தினார். அல்ட்ரா எட்ஜில் கூட, பந்து பேட்டின் அருகே சென்றபோது, ​​சில ஸ்பைக்குகள் காணப்பட்டன. இருப்பினும் நடுவர் அவரை அவுட் என்று அறிவித்தார். இது தவிர, இதுபோன்ற பல முடிவுகளும் காணப்பட்டன.

ரோஸ்டன் சேஸ்:

இதுபோன்ற சூழ்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் புதிய கேப்டன் ரோஸ்டன் சேஸ் போட்டிக்குப் பிறகு அளித்த பேட்டியில், ”வீரர்கள் எல்லை மீறும்போது, ​​எங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. சில சமயங்களில் எங்களுக்கு தடை கூட விதிக்கப்படுகிறது. ஆனால் நடுவருக்கு எதுவும் நடக்காது. அவர் ஒரு தவறான முடிவை அல்லது ஒரு கேள்விக்குரிய முடிவை மட்டுமே எடுக்கிறார், வாழ்க்கை அப்படியே தொடர்கிறது. நடுவர்கள் கொடுக்கும் தவறான முடிவுகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி தோற்றது எப்படி..?

ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 2025 ஜூன் 25ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை 180 ரன்களுக்கு ஆல் அவுட் செய்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்கள் முன்னிலை பெற்றது. இருப்பினும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி 310 ரன்கள் எடுத்தது. இதுபோன்ற சூழ்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 301 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. அதன்பிறகு, வெஸ்ட் இண்டீஸ் 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்கள்.

அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?
மக்களை காக்கும் வவ்வால்கள் - கிராம மக்களின் விசித்திர நம்பிக்கை
உங்கள் அறையின் ஓரத்தில் நிற்பது பேயல்ல. அது ஸ்லீப் பேரலிசிஸ்!
ஏலியனுடன் தொடர்பில் இருந்த ஜார்ஜ் புஷ்? அமேசான் பிரைம் ஆவண படத்தால் சர்ச்சை