IndvsSA : டேவிட் மில்லர் அதிரடி – இந்தியா வெற்றிபெற 188 ரன்கள் இலக்கு
T20 World Cup : உலகக்கோப்பை 2026 போட்டியில் சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 188 ரன்கள் எடுத்தது.

டேவிட் மில்லர் - பிரவிஸ்
உலகக்கோப்பை 2026 போட்டியில் சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. சேசிங் செய்வது இந்திய அணிக்கு சவலாக இருக்கும் என கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்திருந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதல் 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது. அசத்தலாக பந்து வீசிய பும்ரா 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை விழ்த்தியுள்ளார். அர்ஷ்தீப் சிங் 1 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்திய அணியின் பந்து வீச்சில் கேப்டன் எய்டன் மார்க்ரம், குயிண்டன் டி காக் மற்றும் ரியான் ரிக்கெல்டன் என டாப் ஆர்டர்கள் சரிந்துள்ளதால் அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
பும்ராவின் அசத்தல் பந்து வீச்சை பாராட்டிய பிசிசிஐ
Slower ball does the trick 🪄
Jasprit Bumrah and #TeamIndia are elated 🥳
Updates ▶️ https://t.co/ZE8J4fF18z#T20WorldCup | #MenInBlue | #INDvSA pic.twitter.com/GTJJpexljd
— BCCI (@BCCI) February 22, 2026
இந்த நிலையில் பிரவெஸ் உடன் கைகோர்த்த டேவிட் மில்லர் அதிரடியாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் சீரான இடைவேளைகளில் சிக்சர் மற்றும் பவுண்டரிகள் அடிக்க ரன்கள் மெல்ல உயரத் தொடங்கினர். இருவரும் 4 வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 51 ரன்கள் குவித்து அசத்தினர். குறிப்பாக அதிரடிாக ஆடிய டேவிட் மில்லர் 26 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
இதையும் படிக்க : T20 WC Super 8: IND vs SA இன்றைய போட்டியில் திலக் வர்மா நீக்கப்படுகிறாரா? சூர்யகுமார் கொடுத்த விளக்கம்!!
குறிப்பாக வருண் சக்கரவர்த்தியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். இன்றைய தினம் வருண் சக்கரவர்த்திக்கு மோசமாக நாளாக அமைந்தது. அவரது பந்தை சிக்சர்களாக பறக்கவிட்டார். இதனால் அவர் மிகவும் சோகமாக காணப்பட்டார். இந்த நிலையில் 16வது ஓவரை வருண் சக்கரவர்த்தி மீண்டும் வீசினார். அந்த ஓவரில் டிரிஸ்டன் சிக்சர் அடிக்க, மற்றொரு பக்கம் சிக்சர் அடிக்க முயன்ற டேவிட் மில்லர் லாங் ஆனில் கேட்ச் கொடுத்து திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதையும் படிக்க : T20 WC Super 8: தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா.. மீண்டெழுவாரா அபிஷேக் சர்மா?
தனது பந்துகளை சிக்சர்களா பறக்கவிட்ட டேவிட் மில்லரை அவுட்டாக்கி வருண் சக்கரவர்த்தி பழி தீர்த்துகொண்டார். இதன் மூலம் தொடர்ந்து 18 டி20 போட்டிகளிலும் விக்கெட் எடுத்து புதிய சாதனையை அவர் படைத்தார். டேவிட் மில்லர் அவுட்டான பிறகு மற்ற வீரர்களால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. இதனால் தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 187 ரன்கள் எடுத்தது.