கான்லியின் அதிரடி வீண் – 33 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்திடம் வீழ்ந்த பஞ்சாப்
IPL 2026 : முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 235 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியால் 202 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனையடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்திடம் பஞ்சாப் தோல்வியடைந்தது.

ஸ்ரேயாஸ் ஐயர் - இஷான் கிஷன்
ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்க்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. முதலில் களிமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி துவக்கம் முதலே அதிரடியாக ஆடியது. முதலில் களமிறங்கிய அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இணைந்து அணிக்கு நல்ல துவக்கம் தந்தனர்.
அபிஷேக் சர்மா 35 ரன்களுக்கும் டிராவிஸ் ஹெட் 38 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த இஷான் கிஷான் அதிரடியாக ஆடினார். அவருடன் கிளாசனும் தன் பங்குக்கு அதிரடி காட்டினார். இதனால் அந்த அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்தது. கடைசியாக களமிறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி சிறப்பாக ஆட அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த 235 ரன்கள் குவித்தது.
சொதப்பிய பஞ்சாப் ஃபீல்டிங்
இந்த முக்கியமான போட்டியில், பஞ்சாப் அணியின் ஃபீல்டிங் பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக, ஷஷாங்க் சிங் மீண்டும் எளிய கேட்ச் ஒன்றை தவறவிட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த போட்டி ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் முக்கிய கட்டத்தில், அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த ஹெய்ன்ரிச் கிளாசன் கொடுத்த எளிய கேட்சை ஷஷாங்க் சிங் தவறவிட்டார். இந்த தவறுக்குப் பிறகு, பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
கான்லியின் அதிரடி வீண்
போட்டியின் போது கமெண்ட்ரியில் பேசிய ரிக்கி பாண்டிங், பந்து எங்க சென்றாலும் ஷஷாங்க் பக்கம் தான் போகிறது. அவருக்கு ஏதோ வைரஸ் பிடித்தது போல தெரிகிறது” என்று நகைச்சுவையாக தெரிவித்தார். ஆனால் அவர் பதிலில் கடுமை தெரிந்தது. ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரரிடமிருந்து இப்படிப்பட்ட அடிப்படை ஃபீல்டிங் தவறுகள் வரக்கூடாது என்றும் அவர் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் ஹைதராபாத் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடை வெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தனர். மற்றொரு பக்கம் அதிரடியாக கூப்பர் கான்லி அதிரடியாக ஆடி பஞ்சாப்பை தனி ஆளாக போராடினார். கடைசிவரை ஆட்டமிழக்கமால் 107 ரன்கள் குவித்து அசத்தினார். ஆனால் அவருக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமையாத காரணத்தால் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 202 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனையடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியைத் தழுவியது.