Dunith Wellalage: ஆசிய கோப்பை போட்டியில் அதிர்ச்சி.. இலங்கை வீரருக்கு நடந்த சோக சம்பவம்!

Asia Cup 2025: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியின் இளம் வீரர் துனித் வெலலேஜின் தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்குப் பின்னர் இந்தச் சோகச் செய்தி தெரியவந்தது. துனித் உடனடியாக இலங்கை திரும்பியுள்ளார்.

Dunith Wellalage: ஆசிய கோப்பை போட்டியில் அதிர்ச்சி.. இலங்கை வீரருக்கு நடந்த சோக சம்பவம்!

துனித் வெலலேஜ்

Published: 

19 Sep 2025 08:53 AM

 IST

ஆசிய கோப்பையில் விளையாடி வரும் இலங்கை அணியின் இளம் வீரர் துனித் வெலலேஜின் தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியுடன் இலங்கை அணி விளையாடிக் கொண்டிருந்த நிலையில் இந்த சோக செய்தி தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து துனித் வெலலேஜ் உடனடியாக நாடு திரும்பியுள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கியது. 2025, செப்டம்பர் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 8 நாடுகள் பங்கேற்றது. இதில் லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. லீக் போட்டிகளில் கடைசி ஆட்டமாக இன்று இந்தியா – ஓமன் அணிகள் மோதுகின்றது.

ஆட்டத்தின் நடுவில் வந்த சோக செய்தி 


இதற்கிடையில் ஆசிய கோப்பை தொடரின் 11வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் நேற்று (செப்டம்பர் 18) பலப்பரீட்சை நடத்தியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி 18.4 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்படியான நிலையில் இந்த போட்டியின் போது இலங்கை அணியின் இளம் வீரரான துனித் வெலலேஜின் வின் தந்தை காலமானார் ஆனால் போட்டி முடிந்த பின்னரே அவரது தந்தையின் மறைவு செய்து குறித்து தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துனித் வெலலேஜின் தந்தை மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைத்தளம் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனால் ஆசியக் கோப்பையின் மீதமுள்ள போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.  போட்டிக்குப் பிறகு தனது தந்தையின் மரணம் குறித்து இலங்கை பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யாவும், அணி மேலாளர் துனித் வெல்லாலகேவும் அவருக்குத் தெரிவிக்கும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories