Smriti Mandhana Marriage: ஸ்மிருதி மந்தனாவுக்கு டும்! டும்! டும்! எப்போது..? எங்கு தெரியுமா..? வெளியான அப்டேட்!

Smriti Mandhana- Palash Muchhal Marriage: இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும், அவரது காதலர் பலாஷ் முச்சாலும் வருகின்ற 2025 நவம்பர் 23ம் தேதி மகாராஷ்டிராவின் சாங்லியில் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். மேலும், இந்த திருமணத்தில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் வீரர்களும், பாலிவுட்டை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.

Smriti Mandhana Marriage: ஸ்மிருதி மந்தனாவுக்கு டும்! டும்! டும்! எப்போது..? எங்கு தெரியுமா..? வெளியான அப்டேட்!

ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சால்

Published: 

17 Nov 2025 14:50 PM

 IST

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் (Indian Womens Cricket Team) நட்சத்திர தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana), தனது வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல இருக்கிறார். அதன்படி, வருகின்ற 2025 நவம்பர் 23ம் தேதி ஸ்மிருதி மந்தனா தனது நீண்ட நாள் காதலனான பலாஷ் முச்சலை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்மிருதி மந்தனா கிரிக்கெட் களத்துடன் தொடர்புடையவர் என்றாலும், அவரது வருங்கால கணவர் பலாஷ் முச்சால் திரைப்பட உலகத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, ஸ்மிருதி – முச்சால் இணையும் திருமண விழாவில் கிரிக்கெட் மற்றும் திரை பிரபலங்கள் குவிந்து வாழ்த்து மழை பொழிய இருக்கிறார்கள்.

ஹர்மன்ப்ரீத் கவுர் கொடுத்த அப்டேட்:

ஸ்மிருதி மற்றும் பலாஷின் திருமணம் குறித்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஒரு முக்கிய அப்டேட்டை வழங்கியுள்ளார். அதில், “தனது தலைமையின் கீழ் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை உலக சாம்பியன் பட்டத்திற்கு அழைத்துச் சென்ற ஹர்மன்ப்ரீத் கவுர், தனியார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றி, அணியின் வீராங்கனைகளான நாம் அனைவரும் ஸ்மிருதியின் திருமணத்தில் கலந்து கொள்வோம்.” என்றார்.

ALSO READ: சச்சின் சொன்ன இந்த ஒரு வார்த்தை! உலகக் கோப்பையை வெல்ல காரணம்.. ரகசியம் உடைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்!

தொடர்ந்து, ஸ்மிருதி மந்தனாவின் திருமணத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும், நாங்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு மிஸ் செய்கிறோர் என்பதையும் வெளிப்படுத்திய ஹர்மன்ப்ரீத்,“நாங்கள் ஒருவருக்கொருவர் மிஸ் செய்கிறோம். ஒரு தொடர் அல்லது போட்டி முடிவடையும் போது, ​​மீண்டும் எப்போது சந்திப்போம் என்று யோசிக்கிறோம்? நாங்கள் அடுத்து விளையாடப்போகும் தொடர் எந்த தொடராக இருக்கும் என்று யோசிப்போம். ஸ்மிருதியின் திருமணம் முழு அணியையும் மீண்டும் ஒன்றாகப் பார்ப்பதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்” என்று ஆர்வமாக இருப்போம் என்றார்.

ஸ்மிருதி மந்தனா திருமணம் எப்போது எங்கு நடைபெறுகிறது..?


இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும், அவரது காதலர் பலாஷ் முச்சாலும் வருகின்ற 2025 நவம்பர் 23ம் தேதி மகாராஷ்டிராவின் சாங்லியில் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். மேலும், இந்த திருமணத்தில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் வீரர்களும், பாலிவுட்டை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ விருந்தினர் பட்டியல் குறித்து கூடுதல் விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

ALSO READ: இது நடக்கவில்லை என்றால் ஏமாற்றம் வேண்டாம்.. மகளிர் அணிக்கு சுனில் கவாஸ்கர் அறிவுரை!

யார் இந்த பலாஷ் முச்சால்..?

பலாஷ் முச்சால் பாலிவுட் திரைப்பட துறையில் நன்கு அறியப்பட்ட ஒரு பெயர் ஆகும். இவர் இசையமைப்பாளர், பாடகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகத்தையும் கொண்டுள்ளார். மேலும், பிரபல பாடகர் பலக் முச்சாலின் தம்பி ஆவார். மேலும், தனது 18 வயதில் இளைய பாலிவுட் இசையமைப்பாளர் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார்.

துல்கர் சல்மானின் காந்தா படம் எப்படி இருக்கு?
பிளாஸ்டிக் பாத்திரங்களில் நிறைந்திருக்கும் அபாயம்
நியூயார்க்கை சுற்றி வரும் அனிருத் - காவ்யா மாறன்
ரஷ்யா கல்லூரியில் படிக்க விரும்புகிறீர்களா? அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்கு தான்!