Australia vs India: விலா எலும்பில் உள் இரத்தப்போக்கால் அவதி.. ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர்..!

Shreyas Iyer Injury: சிட்னி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3வது ஒருநாள் போட்டியின்போது அலெக்ஸ் கேரியின் ஆட்டமிழக்க செய்ய ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு அற்புதமான கேட்சை தாவி எடுத்தார். அப்போது, ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பக்கத்தை தெரியாமல் மைதானத்தில் பலமாக மோதினார்.

Australia vs India: விலா எலும்பில் உள் இரத்தப்போக்கால் அவதி.. ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர்..!

ஷ்ரேயாஸ் ஐயர்

Published: 

27 Oct 2025 12:22 PM

 IST

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது விலா எலும்பில் காயம் அடைந்த இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு, காயத்தின் விளைவாக உள் இரத்தப்போக்கு ஏற்பட்டதால், சிட்னியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2025 அக்டோபர் 25ம் தேதி சிட்னி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா (IND vs AUS) இடையிலான 3வது ஒருநாள் போட்டியின்போது அலெக்ஸ் கேரியின் ஆட்டமிழக்க செய்ய ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு அற்புதமான கேட்சை தாவி எடுத்தார். அப்போது, ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) இடம் பக்கத்தை தெரியாமல் மைதானத்தில் பலமாக மோதினார். கேட்சை எடுத்த பிறகு அவரது விலா எலும்பில் காயம் ஏற்பட்டதாகத் தோன்றியது. மேலும் டிரஸ்ஸிங் அறைக்கு வந்தவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ALSO READ: சிட்னியில் சின்னாபின்னமான சாதனைகள்.. மாபெரும் ரெக்கார்ட்ஸை படைத்த ரோஹித் – கோலி!

பிசிசிஐ கூறுவது என்ன..?


இதுகுறித்து பிசிசிஐ வட்டாரம் தெரிவிக்கையில், “ஷ்ரேயாஸ் கடந்த இரண்டு நாட்களாக ஐசியுவில் இருக்கிறார். அறிக்கைகள் வந்த பிறகு, உட்புற இரத்தப்போக்கு கண்டறியப்பட்டது. மேலும், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது. இரத்தப்போக்கு காரணமாக தொற்று பரவுவதை நிறுத்த வேண்டியிருப்பதால், குணமடைவதைப் பொறுத்து ஷ்ரேயாஸ் ஐயர் 2 முதல் 7 நாட்கள் வரை கண்காணிப்பில் இருப்பார்,” என்று தெரிவிக்கின்றன.

பிசிசிஐ மருத்துவக் குழுவின் விரைவான நடவடிக்கை:

குறிப்பாக, பிசிசிஐ மருத்துவக் குழுவின் விரைவான மற்றும் சரியான நடவடிக்கையே ஷ்ரேயாஸ் ஐயரின் நிலைமைக்கு உதவியது. இருப்பினும், ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இந்திய அணிக்கு விளையாடியபோது, அவரது உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்தும் பிசிசிஐ வட்டாரம் தெரிவிக்கையில், “இந்திய அணி மருத்துவரும் பிசியோவும் ஷ்ரேயாஸ் ஐயரை உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இப்போது நிலைமை சீராக உள்ளது. ஆனால், இதை அப்படியே விட்டிருந்தால் உயிருக்கு ஆபத்தானதாக இருந்திருக்கலாம். அவர் விரைவில் சரியாகிவிடுவார். உட்புற இரத்தப்போக்கு இருந்ததால், அவர் குணமடைய நிச்சயமாக அதிக நேரம் தேவைப்படும். மேலும் இந்த கட்டத்தில், அவர் போட்டி கிரிக்கெட்டுக்கு திரும்புவதற்கு ஒரு திட்டவட்டமான காலக்கெடுவை நிர்ணயிப்பது கடினம்,” என்று கூறியது.

ALSO READ: ஆஸ்திரேலியாவுக்கு பயம் காட்டும் ஸ்மிருதி மந்தனா.. ரெக்கார்டு வேற லெவல்!

ஆரம்பத்தில், ஷ்ரேயாஸ் ஐயர் மூன்று வாரங்களுக்கு விளையாடாமல் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இப்போது அவரது காயம் தீவிரமாக இருப்பதால் இப்போதைக்கு அவர் இந்திய அணிக்கு திரும்புவது கடினம். அதன்படி, இதுகுறித்து பிசிசிஐ ஷ்ரேயாஸ் ஐயரின் உடல்நிலை குறித்த அப்டேட்டை வெளியிடும்.