T20 World Cup 2026: அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஐசிசி.. உள்ளே வந்த ஸ்காட்லாந்து.. வங்கதேசத்திற்கு ஏமாற்றம்!
Scotland Cricket Team: வங்கதேசத்தில் 2 இந்து இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட பிறகு, ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, கே.கே.ஆர். அணியில் முஸ்தாபிசுர் ரஹ்மானை ரூ.9.20 கோடிக்கு சேர்த்தது. இதன் பிறகு, பிசிசிஐ உத்தரவின் பேரில் வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை அணியில் இருந்து நீக்க கே.கே.ஆர். முடிவு செய்தது.

ஸ்காட்லாந்து அணி - வங்கதேச அணி
2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) வங்கதேசத்திற்கு பதிலாக ஸ்காட்லாந்தை ஐசிசி மாற்றியுள்ளது. முன்னதாக, 2026 டி20 உலகக் கோப்பையில் வங்கதேசம் குரூப் சியில் இடம் பெற்றிருந்தது. பாதுகாப்பு காரணங்களைக் காரணம் காட்டி, வங்கதேச கிரிக்கெட் வாரியம் தங்கள் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தது. அதை ஐசிசி (ICC) நிராகரித்தது. இதன் பிறகு, வங்கதேச அரசாங்கத்தின் முடிவைக் காரணம் காட்டி, 2026 டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவில் விளையாட பிசிபி மறுத்து வெளியேறியது. இதன் காரணமாக, ஐசிசி தற்போது வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணிக்கு வாய்ப்பை வழங்கியுள்ளது.
ALSO READ: டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகல்.. மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் வங்கதேசம்..?
ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு:
🚨 BIG SHAKE-UP IN T20WC2026🚨
Scotland replace Bangladesh in the World Cup.
Group C now features England, West Indies, Italy, Nepal & Scotland.
Cricket just got unpredictable! (Cricbuzz) pic.twitter.com/ZiY2karvtO
— Raj Sharma (@crockraj) January 24, 2026
கிரிக்பஸின் அறிக்கையின்படி, ஐ.சி.சி அதிகாரப்பூர்வமாக ஸ்காட்லாந்துக்கு டி20 உலகக் கோப்பை 2026 இல் இடம் வழங்கியுள்ளது. அதன்படி, ஸ்காட்லாந்து அணி இப்போது வங்கதேசத்திற்கு பதிலாக குரூப் சியில் விளையாடுவார்கள். ஸ்காட்லாந்தின் 3 போட்டிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் ஸ்டேடியத்திலும், ஒரு போட்டி மும்பையில் நடைபெறும். ஸ்காட்லாந்து அணி கொல்கத்தாவில் வெஸ்ட் இண்டீஸ், இத்தாலி மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடவுள்ளது. பின்னர், வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி மும்பையில் நேபாளத்தை எதிர்கொள்ளும் .
முன்னதாக, ஐ.சி.சி., வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு 24 மணி நேர அவகாசம் அளித்திருந்தது. 24 மணிநேரத்திற்கு பிறகு வங்கதேச அரசு இந்தியாவில் போட்டிகளில் விளையாடுவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதன் பிறகு, ஸ்காட்லாந்துக்கு ஐ.சி.சி. ஒரு வாய்ப்பு அளித்துள்ளது. வங்கதேச அரசு மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் முடிவு தவறானது என்று சில முன்னாள் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் கூறியுள்ளனர். இந்தியாவில் டி20 உலகக் கோப்பையை விளையாடாமல் இருப்பதன் மூலம் வங்கதேசம் ரூ.300 கோடியை இழக்கும்.
ALSO READ: சொந்த மண்ணில் 100 டி20 போட்டிகள்.. சிறப்பு சாதனையை படைத்த இந்திய அணி!
சர்ச்சை எப்போது தொடங்கியது?
வங்கதேசத்தில் 2 இந்து இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட பிறகு, ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, கே.கே.ஆர். அணியில் முஸ்தாபிசுர் ரஹ்மானை ரூ.9.20 கோடிக்கு சேர்த்தது. இதன் பிறகு, பிசிசிஐ உத்தரவின் பேரில் வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை அணியில் இருந்து நீக்க கே.கே.ஆர். முடிவு செய்தது. இதன் பிறகு, வங்கதேச கிரிக்கெட் வாரியம் அவசரக் கூட்டத்தைக் கூட்டி, டி20 உலகக் கோப்பை போட்டிகளை இலங்கையில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தது. இருப்பினும், பிசிசிஐ மற்றும் ஐசிசி மறுத்துவிட்டது. அதேநேரத்தில், ஹோட்டல் முன்பதிவு மற்றும் பிற விஷயங்களில் மாற்றங்கள் சாத்தியமற்றது என்பதால் பிசிசிஐ தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.