IND vs NZ 1st ODI: இந்தி இந்தியாவின் தேசிய மொழியா? சர்ச்சையை கிளப்பிய வர்ணனையாளர்.. எழும் விமர்சனங்கள்!
Sanjay Bangar Commentary Controversy: இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக, நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தபோது, 13வது ஓவரை வீச வாஷிங்டன் சுந்தர் வந்தார். அப்போது, விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல், வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சில் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

சஞ்சய் பங்கர்
இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான முதல் ஒருநாள் (IND vs NZ 1st ODI) போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இறுதியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. வர்ணனையின் போது, ஒரு வர்ணனையாளர் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தினார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கர் (Sanjay Bangar), இந்தி வர்ணனை குழுவில் ஒரு பகுதியாக இருந்தார். தனது வர்ணனையின் போது, அவர் இந்தியை இந்தியாவின் தேசிய மொழி என்று குறிப்பிட்டார். இதற்கு இந்தியாவை சேர்ந்த பலரும் இது தவறான தகவல் என்று தெரிவித்து சஞ்சய் பங்கரை விமர்சனம் செய்தி வருகின்றனர்.
ALSO READ: ‘விருதுகளை அம்மாவுக்கு அனுப்புவேன்’ – விராட் கோலி சொன்ன புது விஷயம்!
என்ன நடந்தது..?
Sanjay Bangar during commentary “Hindi is the national language” to Varon Aaron and Jatin Sapru came in between & saved the situation.#SanjayBangar please get your education properly as India doesn’t have any national language.@StarSportsIndia @JioHotstar#INDvsNZ #BCCI #ICC pic.twitter.com/jbPGteav8n
— MD Wasim (@MD_Wasim28) January 11, 2026
இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக, நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தபோது, 13வது ஓவரை வீச வாஷிங்டன் சுந்தர் வந்தார். அப்போது, விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல், வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சில் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இதற்கு காரணம், சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் 100 கி.மீ வேகத்திற்கு மேலாக பந்துவீசியுள்ளார். விக்கெட் கீப்பராக நின்ற கே.எல்.ராகுல் தமிழில் வாஷிங்டன் சுந்தரிடம், பையா உனது பந்துவீச்சு வேகம் ஒரு ஒரு மீடியம் பேஸரின் வேகம் போன்று உள்ளது என்று தெரிவித்தார்.
இந்தி வர்ணனையாளர் குழுவில் இடம்பெற்றிருந்த வருண் ஆரோன், சஞ்சய் பங்கர் வர்ணனை செய்து கொண்டிருந்தனர். அப்போது வருண் ஆரோன், “சஞ்சய் பாய், வாஷிங்டன் சுந்தர் தமிழை நன்றாக புரிந்துகொள்கிறார் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? பாருங்கள், வாஷியின் வேகம் உடனடியாக 92 ஆக குறைந்துவிட்டது.” என்று கேட்டார். இதற்கிடையில் வர்ணனை செய்து கொண்டிருந்த சஞ்சய் பங்கர், “தென்னிந்தியர்கள் தங்கள் மாநில மொழிகளில் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால், இந்திதான் மிகவும் முக்கியமானது. அதுதான் நமது தேசிய மொழி” என்று தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பரபரப்பு:
சஞ்சய் பங்கரின் இந்த கருத்து சமூக ஊடகங்களில் ரசிகர்களிடையே கடுமையான எதிர்வினைகளைத் தூண்டியது. பல பயனர்கள் இந்தியாவிற்கு ஒரு தேசிய மொழி இல்லை என்றும், அனைத்து மொழிகளுக்கும் சமமான மரியாதை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினர்.
ALSO READ: விராட் கோலி அதிரடி… நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
இந்தியா அற்புதமான வெற்றி:
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 300 ரன்கள் குவித்தது. பதிலுக்கு இந்தியா சிறப்பான தொடக்கத்தை அளித்து 49வது ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து போட்டியை வென்றது. விராட் கோலி 93 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான இன்னிங்ஸ் மூலம் இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளமிட்டார். அவர் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் காரணமாக, இந்திய அணி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.