Royal Challengers Bengaluru: ஆர்சிபி அணியை வாங்குகிறாரா கர்நாடகா துணை முதல்வர்..? தீயாய் பரவும் செய்தி..!

Karnataka Deputy CM Shivakumar: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி ஐபிஎல் 2025 சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, RCB அணியை துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் வாங்குவதாக வந்த வதந்திகளை அவர் மறுத்துள்ளார். சிவக்குமார் தனது அறிக்கையில், அவர் RCB அணியில் எவ்வித ஈடுபாடும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.

Royal Challengers Bengaluru: ஆர்சிபி அணியை வாங்குகிறாரா கர்நாடகா துணை முதல்வர்..? தீயாய் பரவும் செய்தி..!

கர்நாடகா துணை முதலமைச்சருடன் விராட் கோலி

Published: 

11 Jun 2025 23:09 PM

 IST

ஐபிஎல் 2025 (IPL 2025) சாம்பியன் பட்டத்தை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (Royal Challengers Bengaluru) விற்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தநிலையில், கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் (D. K. Shivakumar) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வாங்கப் போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இந்தநிலையில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், சமூக ஊடகங்களில் இதுபோன்ற ஒரு வதந்திகளை நிராகரித்துள்ளார். அதன்படி, மலைப்போல் சிவக்குமாரை நம்பி இருந்த பெங்களூரு ரசிகர்கள் தற்போது ஏமாற்றம் அடைந்தனர். ஐபிஎல் 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் 2025 பட்டத்தை வென்றது.

இதன் பிறகு, மறுநாள் அதாவது 2025 ஜூன் 4ம் தேதி பெங்களூருவில் வெற்றி அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் எம் சின்னசாமி மைதானத்தில் வெற்றியைக் கொண்டாட ஒரு சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மைதானத்திற்கு வெளியே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயமடைந்தனர். அப்போதிருந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விற்கப்படுவதாக வதந்திகள் பரவின.

ஆர்சிபியை வாங்குகிறாரா சிவக்குமார்..?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வாங்கியதாக வந்த வதந்திகளை நிராகரித்த டி.கே.சிவக்குமார்”நான் ஒரு பைத்தியக்காரன் இல்லை. நான் என் சிறு வயதிலிருந்தே கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன், வேறு எதுவும் இல்லை. நிர்வாகத்தில் சேர எனக்கு பல வாய்ப்புகள் வந்திருந்தாலும், எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. நான் எதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வாங்க வேண்டும்..? நான் ராயல் சேலஞ்ச் கூட குடிப்பதில்லை” என்றார்.

18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறை:

ஐபிஎல் வரலாற்றில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸை எதிர்கொண்டது. இரு அணிகளும் 17 ஆண்டுகளாக தங்கள் முதல் கோப்பைக்காகக் காத்திருந்தன. இந்த அணிகளில் ஒன்றின் 17 ஆண்டுகால கனவு நனவாகப் போவது உறுதியாக தெரிந்தது. இத்தகைய சூழ்நிலையில், பெங்களூரு இறுதிப்போட்டியை வென்றது. இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை வென்றது. முதலில் பேட்டிங் செய்யும்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 191 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்திருந்தது. ஆனால் பஞ்சாப் 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.