ICC ODI Rankings: 46 ஆண்டுகளுக்குப் பிறகு! ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பிடித்த நியூசிலாந்து வீரர்.. பின்தங்கிய ரோஹித் சர்மா..!
Daryl Mitchell: கடந்த 2025 நவம்பர் 16ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டேரில் மிட்செல் 119 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு, முதுகு காயம் காரணமாக தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து டேரில் மிட்செல் விலகினார்.

டேரில் மிட்செல்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இன்று அதாவது 2025 நவம்பர் 19ம் தேதி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையை வெளியிட்டது. இதில், ஐசிசி தரவரிசை ஒருநாள் பட்டியலில் நியூசிலாந்தின் டேரில் மிட்செல் முதலிடத்தை பிடித்தார். இதன்மூலம், இந்திய கிரிக்கெட் அணியின் “ஹிட்மேன்” ரோஹித் சர்மா (Rohit Sharma) ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதலிடத்தை இழந்துள்ளார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது அரைசதம் மற்றும் ஒரு சதம் அடித்த பிறகு ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை எட்டினார். இருப்பினும், ரோஹித்தின் இடத்தைப் பிடித்த நியூசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல் அவரை விட ஒரு புள்ளி மட்டுமே முன்னிலையில் உள்ளார். இதன்மூலம், 46 ஆண்டுகளில் நியூசிலாந்து பேட்ஸ்மேன் ஒருவர் முதலிடத்தை எட்டுவது இதுவே முதல் முறை.
46 ஆண்டுகளுக்கு பிறகு..
Daryl Mitchell jumped from 746 to 782 rating points, earning 36 points for his 119 v WI
With that, He has become New No. 1 ODI batter 😮 pic.twitter.com/CSVr86OcSK
— 𝑺𝒉𝒆𝒃𝒂𝒔 (@Shebas_10dulkar) November 19, 2025
கடந்த 2025 நவம்பர் 16ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டேரில் மிட்செல் 119 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு, முதுகு காயம் காரணமாக தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து டேரில் மிட்செல் விலகினார். 1979 ஆம் ஆண்டு க்ளென் டர்னருக்குப் பிறகு ஆண்கள் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் நியூசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல் என்ற பெருமையை பெற்றார்.
ALSO READ: சொதப்பும் கம்பீரின் பயிற்சி.. டெஸ்ட் போட்டியில் தடுமாறுகிறதா இந்திய அணி?
பாகிஸ்தான் வீரர்கள் முன்னேற்றம்:
ராவல்பிண்டியில் இலங்கைக்கு எதிராக 102 ரன்கள் எடுத்ததன் மூலம் பாகிஸ்தானின் பாபர் அசாம் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தத் தொடரில் தலா இரண்டு அரைசதங்கள் அடித்ததன் மூலம் முகமது ரிஸ்வான் மற்றும் ஃபகார் ஜமான் முறையே 22வது மற்றும் 26வது இடங்களில் உள்ளனர்.
ஐசிசி டாப் 10 ஒருநாள் பேட்டிங் தரவரிசை பட்டியல்:
- டேரில் மிட்செல் (நியூசிலாந்து) – 782
- ரோஹித் சர்மா (இந்தியா) – 781
- இப்ராஹிம் சத்ரான் (ஆப்கானிஸ்தான்) – 764
- சுப்மன் கில் (இந்தியா) – 745
- விராட் கோலி (இந்தியா) – 725
- பாபர் அசாம் (பாகிஸ்தான்) – 722
- ஹாரி டெக்டர் (அயர்லாந்து) – 708
- ஷ்ரேயாஸ் ஐயர் (இந்தியா) – 700
- சரித் அசலங்கா (இலங்கை) – 690
- ஷாய் ஹோப் (வெஸ்ட் இண்டீஸ்) – 689
ALSO READ: மறக்குமா நெஞ்சம்..! நவம்பர் 19, 2023… உலகக் கோப்பையை மிஸ் செய்த இந்திய அணி!
ரோஹித் சர்மா மீண்டும் முதலிடம் பிடிக்க வாய்ப்பா?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டால் முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடிக்க முடியும். இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகின்ற 2025 நவம்பர் 30ம் தேதி தொடங்குகிறது. டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித் இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.