IPL 2026: ரிஷப் பண்ட் நிதான அரைசதம்.. லக்னோவின் வெற்றிக்காக நடராஜன் ஷாட்!

SRH vs LSG: ஐபிஎல் 2026 சீசனின் 10வது போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 5ம் தேதி ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 19.5 ஓவர்களில் வெற்றி பெற்றது. 

IPL 2026: ரிஷப் பண்ட் நிதான அரைசதம்.. லக்னோவின் வெற்றிக்காக நடராஜன் ஷாட்!

ரிஷப் பண்ட்

Updated On: 

05 Apr 2026 19:47 PM

 IST

ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) 10வது போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 5ம் தேதி ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் (Lucknow Super Giants) மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 19.5 ஓவர்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம், லக்னோ தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 156 ரன்கள் எடுத்தது. இதற்குப் பதிலளித்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, கடைசி ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை விரட்டிப் பிடித்தது.

ALSO READ: ஆர்சிபிக்கு எதிரான முக்கிய போட்டி.. கால் பதிக்கும் எம்.எஸ்.தோனி..?

கேப்டன் ரிஷப் பண்ட் அரைசதம்:

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கா  கேப்டன் ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் எடுத்து ஆட்டத்தை வெல்லும் வரை களத்தில் இருந்தார். அதேநேரத்தில், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய எய்டன் மார்க்ரம் 27 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்து 45 ரன்கள் எடுத்தார். 157 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய லக்னோ அணிக்கு மோசமான தொடக்கம் கிடைத்தது. மிட்செல் மார்ஷ் 12 பந்துகளில் 2 பவுண்டரிகளை அடித்து 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். லக்னோவின் முதல் விக்கெட் 37 ரன்களில் வீழ்ந்தது. அதன்பிறகு மறுமுனையில் விக்கெட்டுகள் சீராக வீழ்ந்தன, ஆனால் ரிஷப் பந்த் ஒரு முனையில் நிலைத்து நின்று ஆடினார்.

இதற்கிடையில் ஆயுஷ் படோனி 9 பந்துகளில் 12 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 4 பந்துகளில் 1 ரன்னும், அப்துல் சமத் 12 பந்துகளில் 16 ரன்களும் எடுத்தனர். ரிஷப் பந்த் 8 பவுண்டரிகளை அடித்து, 50 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி:

முன்னதாக, ஷமி தனது நான்கு ஓவர்களில் 18 டாட் பந்துகளை வீசி, வெறும் 9 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 2  விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சில் பெரும் சேதத்தை ஏற்படுத்தினார். இதன் காரணமாக லக்னோ அணி மிகவும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி, வலுவான ஹைதராபாத் அணியை 156 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது.

ALSO READ: 10 ஓவர்களில் வெறும் 35 ரன்கள்.. முதல் பாதியில் சொதப்பிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

பின்னர்,  கடைசி 12 பந்துகளில் வெற்றி பெற லக்னோவுக்கு 13 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது, ஆனால் ஹர்ஷ் துபே 19வது ஓவரில் வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரில் லக்னோவுக்கு ஒன்பது ரன்கள் தேவைப்பட்டன. ரிஷப் பண்ட் முதல் பந்திலேயே ஒரு பவுண்டரி அடித்தார். 5 பந்துகளில் 5 ரன்கள் மீதமிருந்த நிலையில், பண்ட் ஒரு பவுண்டரி அடித்தார். அதைத் தொடர்ந்து இரண்டு டாட் பந்துகள் வீசப்பட்ட நிலையில், பண்ட் ஒரு பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்